கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளியில் தேசிய விண்வெளி தின கண்காட்சி

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 23ம் தேதி தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படுகிறது,
2023ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி இஸ்ரோ சார்பில் சந்திராயன்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கி சாதனை படைத்ததை பாரதப் பிரதமரால் தேசிய விண்வெளி தினம் அறிவிக்கப்பட்டது,

நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை இறக்கிய முதல் நாடாகவும்,நிலவில் மென்மையாக தரையிறக்கியதில் 4வது நாடாகவும்,இந்தியா சாதனை படைத்துள்ளது.விக்ரம் லேண்டர் இறங்கிய இடத்திற்கு சிவசக்தி என பெயரிடப்பட்டுள்ளது.
கோவில்பட்டி ரோட்டரி சங்கம்,தூத்துக்குடி அஸ்ட்ரோ கிளப் ஆகியவை சார்பில் தேசிய விண்வெளி தினம் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி நடந்த விண்வெளி கண்காட்சியில் விக்ரம் லேண்டர், நிலா, விண்வெளி, சூரிய கடிகாரம், உள்ளிட்ட மாதிரிகளை மாணவிகள் செய்து கண்காட்சியில் இடம் பெற செய்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
மேலும் தேசிய விண்வெளி தின வினாடி வினா போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
தேசிய விண்வெளி தின விழிப்புணர்வு வால்போஸ்டர்கள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் சஜீலா பீவி தலைமை தாங்கினார்.ரோட்டரி மாவட்ட சாலை பாதுகாப்பு பிரிவு தலைவர் முத்துச்செல்வம், இயற்பியல் ஆசிரியை கமலா ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவில்பட்டி ரோட்டரி சங்கதலைவர் முத்து முருகன் கலந்து கொண்டு தேசிய விண்வெளி தின வினாடி வினா போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விழிப்புணர்வு வால்போஸ்டர்களை வழங்கி பேசினார்.
ரோட்டரி சங்க உறுப்பினர் நடராஜன் உள்பட பள்ளி மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.







