கட்டிட வேலை தொடங்கும் முன்பே வரைபட அனுமதி பெறவேண்டும் ; அரசு உத்தரவு
Oplus_16908288
தமிழ்நாட்டில் கட்டிடம் கட்டுவோர் கட்டிட வேலை தொடங்கும் முன்பே வரைபட அனுமதி பெறவேண்டும் என்று அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது :-

புதிய கட்டிடங்கள் கட்டுபவர்கள் இனிமேல் கட்டிட வேலை தொடங்குவதற்கு முன்பே
கட்டிட வரைபட அனுமதி பெற வேண்டும்.
கட்டிட வரைபட அனுமதி பெற்ற பிறகு
கட்டுமான வேலையை
தொடங்க வேண்டும்.
கட்டிட வரைபட அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டுவது தெரிய வந்தால் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம்
தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதுகாப்பான வீடு…சட்டபூர்வமான வீடு… உங்கள் குடும்பத்தின் நலனுக்கான முதல் படி!
கட்டிட அனுமதி பெறுவது எப்படி?
*கட்டிடம் கட்டும் இடத்திற்கு உண்டான ஆவணங்களை
எடுத்துக்கொண்டு
உங்கள் உள்ளாட்சி
அயைப்புகளில்
பதிவு பெற்ற
பொறியாளரை
அணுகவும்.
* தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டிட வரைபடத்தை வலைத்தளத்தில் பதிவேற்றவும்.
* ஆய்வு மற்றும்
சரிபார்ப்புக்கு பின்
அனுமதி
வழங்கப்படும்.
* அனுமதி பெற்ற பிறகு மட்டுமே கட்டுமான வேலைகளை
மேற்கொள்ளவும்.

எனவே சட்டப்படி அனுமதி பெற்று கட்டிடம் கட்டுவோம்….சிக்கல்களை தவிர்ப்போம்.
மேலும் தகவலுக்கு உங்கள் உள்ளாட்சி அமைப்பை தொடர்பு கொள்ளவும். அல்லது இணையதளத்தை www.tnrd.gov.in
/tnlocalbody
பார்வையிடவும்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.







