சாலை மறியலின் போது தாக்குதல் நடத்திய போலீஸ் மீது நடவடிக்கை கோரி சார் ஆட்சியரிடம் மனு
Oplus_16908288

கோவில்பட்டி – மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்திட வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு, மந்தித்தோப்பு ரோடு வியாபாரிகள் நலச் சங்கம், மற்றும் குடியிருப்போர் சங்கங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக, தமிழ்நாடு முதலமைச்சருக்கு 1000 கடிதங்கள் அனுப்பும் போராட்டம், கடையடைப்பு, கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் என பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றது.

இப்போராட்டத்தின் காரணமாக கோவில்பட்டி சார் ஆட்சியர் தலைமையில் 31-7-26 அன்று சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்தாத கோவில்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, போராட்ட குழு சார்பாக 18-8-26 அன்று மந்திதோப்பு சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் கடுமையாக தாக்கினார்கள். காவல்நிலைய சார்பு ஆய்வாளர் நியூட்டன் ஜெபராஜ் என்பவர் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகி வழக்கறிஞர் ரவிகுமார் மீது தாக்குதல் நடத்தியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் மார்க்சிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் கடுமையாக தாக்கப்பட்டார், மேற்படி தாக்குதல் நடத்திய சார்பு ஆய்வாளர் நியூட்டன் ஜெபராஜ் மற்றும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பின்பு சார் ஆட்சியரிடம், தாக்குதல் நடத்திய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு வழங்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிகுமார், இந்தியக் கலாச்சார நட்புறவு கழகத்தின் மாநில துணைத் தலைவர் அபிராமி முருகன், நிர்வாகிகள் வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், ராமலட்சுமி, மணிமேகலை,
மக்கள் நீதி மய்யம் கமல் ரமேஷ், கல்லூரணி, இராதாகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சி செண்பகராஜ், பகத்சிங் ரத்ததான கழகம் மா காளிதாஸ், லட்சுமணன், இந்திய தேசிய காங்கிரஸ், BSNL துரைராஜ், INTUC ராஜசேகரன், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்து குமார், ஜெகநாதன், வழக்கறிஞர் முத்துக்குமார், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகி தவம் பாலாஜி, தியாகி விஸ்வநாத தாஸ் பேரவை சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







