கோவில்பட்டியில், மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான பல்வேறு போட்டிகள்
Oplus_16908288
கோவில்பட்டி ஜி. வி. என். கல்லூரி கணினி அறிவியல் துறையின் சார்பில் “மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி – (இந்நோவெக்சா 2026) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி. கல்லூரியின் செயலர் பா மகேந்திரன் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது கல்லூரி முதல்வர் அ. பாண்டியராணி மற்றும் சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் பா மகேஷ்குமார் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியின் மூலம் புதுமை, தொழில்நுட்பத் திறமை மற்றும் படைப்பாற்றலை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 180 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கட்டுரைப் படைப்பு, வினாடி வினா, வலைத்தள வடிவமைப்பு, பிழை திருத்தம், குறும்படம், உங்களுக்கு பிடித்தவை, மின் விளையாட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றன
இந்நிகழச்சியை கணினி அறிவியல் துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒருங்கிணைத்து, அனைத்து போட்டிகளும் சுமூகமாக நடைபெறுவதற்கு திறம்பட செயல்பட்டனர்.

நிறைவு விழாவில் கல்லூரியின் முதல்வர் அ. பாண்டியராணி மற்றும் சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் முனைவர் பா மகேஷ்குமார் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தனர்.
பலவேறு போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு, ஒட்டுமொத்த திறமையை வெளிப்படுத்தி வெற்றிக்கோப்பையை சாத்தூர் ஸ்ரீ.எஸ்.ராமசாமி நாயுடு நினைவு கல்லூரி மாணவர்கள் வென்றனர்.







