கோவில்பட்டி அருகே கடலையூரில் தியாகிகள் போராட்ட நினைவு தினம்
Oplus_16908288
1942 ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் மகாத்மா காந்தி, ஆங்கிலேய அரசை அடிபணிய வைக்க செய் அல்லது செத்து மடி எனும் முழக்கமிட்டு வெள்ளையனே வெளியேறு என்ற ஒத்துழையாமை இயக்கத்தை துவக்கி வைத்தார்

அன்று முதல் நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது போராட்டத்தின் விளைவாக கோவில்பட்டி அருகே கடலையூரில் ஆகஸ்ட் 22ம் தேதி வெயிலுகந்த முதலியார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் போது ஆங்கிலேய அரசால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் சங்கரலிங்க முதலியார் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மாடசாமி முதலியாருக்கு இடுப்பில் குண்டு பட்டு வெளிவந்தும். ராமசாமி முதலியாருக்கு கட்டை விரலில் குண்டு பட்டு துண்டாகியும் படுகாயமடைந்தனர். மேலும் ஆங்கிலேய அரசால் நெசவு நூல் மற்றும் பாவுகள் அடித்து நொறுக்கப்பட்டன
போராட்டத்தில் 34 தியாகிகள் கலந்து கொண்டனர்.இந்த போராட்டத் தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் கடலையூரில் நினைவுஸ்தூபி அமைக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் நினைவு தின மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கடலையூரில் உள்ள தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

போராட்ட தியாகி மாடசாமி முதலியாரின் பேரன் பணி நிறைவு பெற்ற அரசு பள்ளி ஓவிய ஆசிரியருக்கு சால்வை அணிவித்து புத்தகம் வழங்கி கவுரவிக்கப்பட்டது
ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்து முருகன்,முத்துச்செல்வன்,நடராஜன்,போராட்ட தியாகியின் வாரிசுதாரர் வேல்முருகன்,சமூக ஆர்வலர் மாரிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.







