தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேசமணி நகர் பகுதியைச் சேர்ந்த காசி (47/20) என்பவரை சொத்து பிரச்சினை காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த அவர்களது உறவினர்களான தட்சிணாமூர்த்தி (59/26), அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் சேர்ந்து அரிவாளால் தாக்கி கொலை செய்தனர். இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் கொலை வழக்குபதிவு செய்து புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் […]
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற ராதாபுரம் சட்டமன்றத் தொகுதித் தேர்தலில் தி.மு.க. சார்பில் அப்பாவு மற்றும் அ.தி.மு.க. சார்பில் இன்பதுரை உட்பட மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தி.மு.க. வேட்பாளர் அப்பாவு 69,541 வாக்குகள் பெற்றார். எனினும், வெறும் 104 வாக்குகள் என்ற மிகக் குறைந்த வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தல் முடிவைத் தொடர்ந்து, தபால் வாக்குகள் மற்றும் சில குறிப்பிட்ட சுற்றுகளின் வாக்குகள் […]
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.பி. சி.வி. சண்முகம், மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்த நிலையில், காலியாக இருக்கும் இடத்துக்கு வருகிற 18-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. தமிழ்நாடுசட்டமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ள தவெக நிறுத்தும் வேட்பாளரே தேர்தலில் வெற்றி பெறுவார். இந்த நிலையில் மாநிலங்களவை சீட்டை தங்களுக்கு தர வேண்டும் என்று கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் தவெகவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக […]
அரசின் வளர்ச்சி பணிகளை விரைவுபடுத்தமாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்; தூத்துக்குடி -ஸ்ரீநாத்
மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும். பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும். இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும். அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை. நியமனம் செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது…. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சார்ந்த திட்டப் பலன்களும் பொதுமக்களுக்கு விரைவாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு சீரிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. இயற்கைச் சீற்றம். நோய்த்தொற்று […]
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா, பரமன்குறிச்சி பிச்சுவிளையைச் சேர்ந்தவர் கோபி (வயது 45). இவர் தூத்துக்குடியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் ஏரல் பகுதியைச் சேர்ந்த திருப்பதி மகன் ராஜா என்பவருக்கு சொந்தமான சொத்தினை ரூ.90 லட்சத்திற்கு விலை பேசி உள்ளார். இதற்கென முதற்கட்ட முன்பணமாக ரூ.72 லட்சத்தை அவரிடம் கோபி செலுத்தியுள்ளார். இதனை முன்பணமாக பெற்றுக் கொண்ட ராஜா மற்றும் அவரது மனைவி பொன்தெய்வம் ஆகிய இருவரும், மீதி தொகை ரூ.18 லட்சத்தை […]
அதிமுக எம்.பி. இன்பதுரை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- Core Cell உள்ளிட்ட பல அடுக்கு அதிகாரப்பூர்வ பாதுகாப்பபு வளையங்கள் அரசால் வழங்கப்பட்டுள்ள நிலையில், முதல்-அமைச்சர் விஜய் தனது தனிப்பட்ட பாதுகாவலருடன் வலம் வருவது ஏன்..? மாநில காவல் துறையினர் வழங்கும் பாதுகாப்பு மீது முதல்-அமைச்சருக்கே முழு நம்பிக்கை இல்லையா? அரசுப் பாதுகாப்பு அமைப்புகளைகளை சாராத ஒருவர், ‘பாதுகாவலர்’ என்ற பெயரில் அவரது நிழலாகத் தொடர்ந்து செயல்படுவது பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு (Security Protocols) ஏற்புடையதா? அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வளையத்திற்குள் […]
கோவில்பட்டி அருகே வில்லிசேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாகராஜ் (65) என்பவர் கயத்தாறு சாலையில் தினமும் காலையில் நடைப்பயிற்சி செல்வது வழக்கம். சம்பவத்தன்று காலை நாகராஜ் சென்றபோது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரி மோதி படுகாயமடைந்தார். கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி அண்ணா நகர் காலனி பகு தியில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோ கம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து பொதுமக் கள் கேட்டால் ஊராட்சி நிர்வாகம் சரியான பதில் தரவில்லை என்பதால் அப் பகுதி பொதுமக்கள் கோவில்பட்டி கடலையூர் சாலையில் காலிக் குடங்க ளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர. இது குறித்து தகவல் கிடைத்ததும் நாலாட்டின்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து […]
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற விவசாய கடன்களை முழுமை யாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் உரம் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத் தியும் கரிசல் பூமி விவசா யிகள் சங்கம் சார்பில் கோவில்பட்டி சார் ஆட்சி யர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். கரிசல் பூமி விவசா யிகள் சங்கத்தின்தலைவர் வரதராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில் திரளான விவ சாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை […]
கர்நாடக மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக அதிரடி காட்டிய அண்ணாமலை, அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்.டு 2020-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தார். தனது அதிரடி பேச்சால் இளைஞர்களை ஈர்த்த அவர், குறுகிய காலத்திலேயே தமிழக பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டார். 2024-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ.க.வின் வாக்கு வங்கி 11 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்தது. ஆனால், திடீரென 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து அண்ணாமாலை மாற்றப்பட்டார். இதற்கு அ.தி.மு.க. […]







