கோவில்பட்டி அருகே டிப்பர் லாரி மோதி விவசாயி பலி
கோவில்பட்டி அருகே வில்லிசேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாகராஜ் (65) என்பவர் கயத்தாறு சாலையில் தினமும் காலையில் நடைப்பயிற்சி செல்வது வழக்கம்.

சம்பவத்தன்று காலை நாகராஜ் சென்றபோது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரி மோதி படுகாயமடைந்தார்.
கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








