பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Oplus_16908288
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற விவசாய கடன்களை முழுமை யாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் உரம் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத் தியும் கரிசல் பூமி விவசா யிகள் சங்கம் சார்பில் கோவில்பட்டி சார் ஆட்சி யர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.

கரிசல் பூமி விவசா யிகள் சங்கத்தின்தலைவர் வரதராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில் திரளான விவ சாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்ட இறுதியில் கோரிக்கை மனுவினை சார் ஆட்சியர் ஹீயூ மன் சூ மங்களிடம் வழங்கினர்.








