கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை; மனைவி, மகள் விடுதலை
தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேசமணி நகர் பகுதியைச் சேர்ந்த காசி (47/20) என்பவரை சொத்து பிரச்சினை காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த அவர்களது உறவினர்களான தட்சிணாமூர்த்தி (59/26), அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் சேர்ந்து அரிவாளால் தாக்கி கொலை செய்தனர்.

இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் கொலை வழக்குபதிவு செய்து புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி திரு. தாண்டவம் கடந்த 1.6.2026 அன்று மேற்படி தட்சிணாமூர்த்தியின் மனைவி மற்றும் மகள் ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்டும், எதிரி தட்சிணாமூர்த்தியை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் தலா ரூபாய் 10,000/- அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் .சுனில் அவர்களையும், இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜ், நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல் ராஜ் , வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் சிவநேசமாணிக்கம் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா பாராட்டினார்.

இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 12 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.







