கோவில்பட்டியில் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில்போலீசார் நடை ரோந்து
Oplus_16908288
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா தலைமையில் கோவில்பட்டியில் நேற்று போலீசார் நடை ரோந்து சென்றனர்.

கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன், கோவில்பட்டி கிழக்கு குற்றப்பிரிவு ஆய்வாளர் குமாரவேல் பாண்டியன் உட்பட சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் இருந்து எம்.எல்.ஏ அலுவலகம் சந்திப்பு வரை நடை ரோந்து சென்றனர் குற்றச்சம்பவங்களை தடுக்கும் நோக்கிலும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும், முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவ வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.








