தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மொட்டகோபுரம் அருகே நேற்று (04.06.2026) போலீசார் வாகன சோதனைகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்த தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் (20), அழகேசபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (20), எஸ் . எஸ். மாணிக்கபுரத்தைச் சேர்ந்த அருண்குமார் (22) மற்றும் திருநெல்வேலி சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்த மாயகணபதி (24) ஆகிய 4 பேர் பிடி பட்டனர்- இதுகுறித்து காவல் ஆய்வாளர் அருளப்பன் வழக்கு பதிவு செய்து 4 […]
தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையின மக்களின் சுய வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக டாப்கெட்கோ மூலம் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டங்கள் குறித்துத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினரருக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களான சிறு தொழில் கடன், விராசாத் (கைவினை கலைஞர்களுக்கான கடன் […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் நடத்திய அதிரடி ஆய்வின் போது, அவரிடமே விரைவான கட்டண தரிசனத்துக்கு ரூ.4,000 வாங்கிய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து கோவில் அலுவலக கோப்புகளை ஆய்வு செய்த அமைச்சர், பல்வேறு முறைகேடுகள் நடந்ததைக் கண்டுபிடித்துத் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். இச்சம்பவத்தின் எதிரொலியாகத் திருச்செந்தூர் கோவில் உயர் அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்படுவார்கள் எனப் பரபரப்பு நிலவிய நிலையில், தற்போது முதற்கட்டமாக இணை ஆணையர் மற்றும் உதவி […]
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுற்றுச் சூழலுக்கும், விவசாயத்திற்கும், மீனவர்களுக்கும் பெரும் தீங்கினைச் செய்த, கேடு விளைவித்த வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் நாசகார நச்சாலையை எதிர்த்து பல ஆண்டுகள் மக்களைத் திரட்டி மறுமலர்ச்சி திராவிட NJNமுன்னேற்றக் கழகமும், வணிகர் சங்கங்களும், தூத்துக்குடி சுற்றுவட்டார கிராம மக்களும் கடுமையான போராட்டங்களை நடத்தினார்கள். எடப்பாடி […]
சென்னையை அடுத்த புளியந்தோப்பு பகுதியில் அமைந்துள்ள உருது நடுநிலைப் பள்ளியின் புதிய கட்டிடம்திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, புதிய கட்டிடத்தை முறைப்படி திறந்து வைத்து குத்துவிளக்கினை ஏற்றினார். விளக்கேற்றி முடித்தவுடன், மரபுப்படி தனக்கு அருகில் நின்றிருந்த தவெக சட்டமன்ற உறுப்பினர் பல்லவியிடம் மெழுகுவர்த்தியைக் கொடுக்காமல், அவரைத் தாண்டி அடுத்ததாக நின்றிருந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியிடம் மேயர் பிரியா அதனை நேரடியாக வழங்கியுள்ளார். மெழுகுவர்த்தியை வாங்குவதற்காகச் சட்டமன்ற […]
தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் இன்று ஜுன் 4ம் தேதி தொடங்கப்பட்டுள்ள நிலையில் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கோவில்பட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளி முதலாம் வகுப்பு புதிய மாணவர்களுக்கு ரோஜாப்பூ மற்றும் கடலை மிட்டாய் வழங்கியும் 6,7,8ம் வகுப்பு மாணவர்களுக்கு 100 திருக்குறள் புத்தகங்கள் பரிசளித்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இவற்றைப் பெற்றுக் கொண்ட மாணவ மாணவிகள் குறள் வழி நடக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமரன் தலைமை தாங்கினார் […]
தமிழக முதலமைச்சர் விஜய் யை இயக்குனர் பார்த்திபன் நேரில் சந்தித்து வாழ்த்து மடல் வழங்கினார். இந்த சந்திப்பு பற்றி பார்த்திபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கருத்துக் கணிப்புகளுக்கு கடுக்காய் கஷாயம் கொடுத்து விட்டு, மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆட்சியமைத்து, AM முதல் PM வரை ஒரு சாதாரண அரசு அலுவலராகவே பணியாற்றும் ஒரு CM ! சினிமா ஒரு சொகுசு சொர்க்கபுரி. சகல சௌகர்ய விமானத்தில் பல வருடம் பயணித்தவர் சட்டென மாறிய வானிலைப் போல CM நாற்காலியில் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரம் கோவில்பட்டி. அதேபோல் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகளும் பெருகிக்கொண்டே வருகின்றன. கோவில்பட்டி நகரில் இதயம் போன்ற பகுதியான பஸ் நிலையம், மெயின் ரோடு. ஏ கே எஸ் தியேட்டர் ரோடு, மாதா கோயில் ரோடு, மற்றும் எட்டயபுரம் ரோடு, புது ரோடு , கடலையூர் ரோடு, பசுவந்தனை சாலைஉள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் எப்போதும் இருக்கும். இந்த சாலைகள் அனைத்திலும் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளன. ஒவ்வொரு கடைகளுக்கு முன்பும் ஆக்கிரமிப்பு […]
சென்னை அருகே பள்ளிக்கரணை பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இது அருகே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பகுதிக்கும் அடுத்தடுத்து பரவியது. இதில், 100-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன. அவை பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் என்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன என்றும் கூறப்படுகிறது. கரும்புகை வான் வரை பரவியது. இதனால், மேடவாக்கத்தில் இருந்து வேளச்சேரி வகை வாகன நெரிசல் ஏற்பட்டது. சென்னை பள்ளிக்கரணை மற்றும் […]
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா தலைமையில் கோவில்பட்டியில் நேற்று போலீசார் நடை ரோந்து சென்றனர். கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன், கோவில்பட்டி கிழக்கு குற்றப்பிரிவு ஆய்வாளர் குமாரவேல் பாண்டியன் உட்பட சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் ஆகியோர் பங்கேற்றனர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் இருந்து எம்.எல்.ஏ அலுவலகம் சந்திப்பு வரை நடை ரோந்து சென்றனர் குற்றச்சம்பவங்களை தடுக்கும் நோக்கிலும், பொதுமக்களின் […]







