கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சமூக ஆர்வலர்கள் பாடைகட்டி நூதன போராட்டம்


தூத்துக்குடி மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரம் கோவில்பட்டி. அதேபோல் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகளும் பெருகிக்கொண்டே வருகின்றன.
கோவில்பட்டி நகரில் இதயம் போன்ற பகுதியான பஸ் நிலையம், மெயின் ரோடு. ஏ கே எஸ் தியேட்டர் ரோடு, மாதா கோயில் ரோடு, மற்றும் எட்டயபுரம் ரோடு, புது ரோடு , கடலையூர் ரோடு, பசுவந்தனை சாலைஉள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் எப்போதும் இருக்கும்.

இந்த சாலைகள் அனைத்திலும் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளன. ஒவ்வொரு கடைகளுக்கு முன்பும் ஆக்கிரமிப்பு பெருகிக்கொண்டே வருகிறது. இதனால் சாலையின் அகலம் பாதியாக குறைந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனை அகற்றும் முயற்சியில் போலீசாரோ, நகராட்சி நகராட்சி நிர்வாகமும் ஈடுபட்டதாக தெரியவில்லை. அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் இது தொடர்பாக எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை.
இந்த நிலையில் சமூக ஆர்வலர்கள்b கோவில்பட்டியில் இன்று நூதன போராட்டம் நடத்தினார்கள் கோவில்பட்டி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அலட்சியம் காட்டி வரும் அதிகாரிகளை கண்டித்து சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு பாடைகட்டி நூதன போராட்டம் நடத்தினார்கள்.

இறந்தவர் போல் ஒருவர் பாடையில் படுத்துக்கொள்ள அந்தப் பாடையை ஊர்வலமாக சுமந்து கொண்டு நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் வரை வந்தனர்.
பின்னர் பாடையை கீழே இறக்கி வைத்து விட்டு அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கோஷம் எழுப்பினார்கள்.







