• October 21, 2026

Month: June 2026

செய்திகள்

த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் மீது தகுதிநீக்க நடவடிக்கை

தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 13-ந் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. அரசு வெற்றி பெற்றது. ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் கிடைத்தன. 5 பேர் நடுநிலை வகித்தனர். தி.மு.க. வெளிநடப்பு செய்தது. இதில், அ.தி.மு.க.வை சேர்ந்த 25 உறுப்பினர்களும் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்திருந்தனர். இவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதம் மீதான நடவடிக்கை குறித்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், தலைமைச்செயலகத்தில் நிருபர்களை […]

செய்திகள்

முதலமைச்சரை நேரில் சந்தித்து, ஒரு மாத ஆட்சிக்கு அன்புமணி பாராட்டு 

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று நாளையுடன் ஒரு மாதம் நிறைவடையும் நிலையில், பாமக தலைவர் அன்புமணி இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது தவெக அரசின் ஒரு மாத  செயல்பாடுகளைப் பாராட்டியதுடன், சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அவர் அளித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, சமீபத்தில் நடைபெற்ற அனைத்துக் […]

தூத்துக்குடி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி துறைமுக ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி, துறைமுக நிர்வாக அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசால் பல்வேறு துறைமுகங்களில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து விதமான தனியார்மய நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும். துறைமுகத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தின்படி, ஓய்வூதியப் பலன்களில் உள்ள நிலுவையில் இருக்கும் அனைத்துக் குறைபாடுகளையும் முறைப்படி சரி செய்து வழங்க வேண்டும். துறைமுகத் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி யுடன் சந்திப்பு

அதிமுகவில் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த கடம்பூர் ராஜு, நான்காவது தடவை போட்டியிட்டபோது தோல்வி அடைந்தார்.  கோவில்பட்டி தொகுதியில் இதுவரை வெற்றி அடையாத திமுக வெற்றி பெற்று கோவில்பட்டி தொகுதியை கைப்பற்றியது.   தேர்தல் தோல்விக்கு பிறகு கடம்பூர் ராஜு சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் ஆனந்தை சந்தித்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார் . அவரது முடிவுக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.  இந்த நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் அடங்கிய கோவில்பட்டி […]

செய்திகள்

5 குடும்பங்களுக்கு கல்வி உதவித்தொகை; அமைச்சர் ஆனந்த் வழங்கினார்

சென்னை தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான ஆனந்த்தை கடந்த வாரம் சந்தித்து,  குடும்ப சூழ்நிலை காரணமாக தங்கள் குழந்தைகளின் பள்ளி கட்டணங்களை செலுத்த முடியவில்லை என்று தியாகராய நகர் பகுதியை சேர்ந்த 5 பெற்றோர்கள் மனு அளித்திருந்தனர். இந்த மனுக்களை உடனடியாக பரிசீலித்த அமைச்சர் , ஏழை, எளிய மாணவர்களின் கல்வி தடைபடக் கூடாது என்ற நோக்கில், பள்ளிக் கட்டணங்களை செலுத்த முடியாமல் தவித்து வந்த 5 குடும்பங்களுக்கு கல்வி […]

செய்திகள்

இந்தியா கூட்டணி கூட்டம் : தி.மு.க., ஆம் ஆத்மி புறக்கணிப்பு

இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகளுக்கிடையேயான கருத்து வேறுபாடுகளை சரிசெய்வது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சமீபத்திய தேர்தல்களில் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் தமிழ்நாட்டில் தி.மு.க. தோல்வியை சந்தித்தது. தமிழ்நாட்டில் கூட்டணி மாறியதால், இந்தியா கூட்டணியில் பங்கேற்பதை திமுக தவிர்த்துள்ளது. ஆம் ஆத்மியும் பங்கேற்கவில்லை.  இந்தக் கூட்டத்தில் […]

செய்திகள்

தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்துக்கு ‘கீர்த்தி சக்ரா ‘ விருது 

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (ஜூன் 8) முப்படைகள், மத்திய ஆயுதக் காவல் படைகள், மற்றும் மாநில, யூனியன் பிரதேச போலீஸ் அதிகாரிகளுக்கு வீரதீர விருதுகளை வழங்கினார்.  இன்று மாலை ராஷ்டிரபதி பவனில் நடந்த பாதுகாப்புப் படை விருது வழங்கும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. லெப்டினன்ட் கமாண்டர் சூரஜ் பராஷர், லெப்டினன்ட் கர்னல் நிதீஷ் பார்தி சுக்லா, மேஜர் ஆதித்ய பிரதாப் சிங், இன்ஸ்பெக்டர் லக்ஷ்மன் கேவட் மற்றும் ரமேஷர் துர்கா தேஷ்முக் ஆகியோருக்கு’ சவுரிய […]

தூத்துக்குடி

லாட்டரி டிக்கெட் விற்பனை, ஆற்று மணல் திருட்டு: 6பேர் கைது

தூத்துக்குடிதென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்  (08.06.2026) சட்டவிரோதமாக லாட்டரி டிக்கெட் விற்பனையில் ஈடுபட்ட 3 எதிரிகள் கைது செய்யப்பட்டனர். தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் வழக்குபதிவு செய்து சட்ட விரோதமாக லாட்டரி டிக்கெட் விற்பனையில் ஈடுபட்ட டூவிபுரம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (34), முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த ஜான் (33) மற்றும் பாத்திமா நகரைச் சேர்ந்த ஆல்வின் (44) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து மொத்தம் 6 செல்போன்கள் மற்றும் ரொக்க பணம் […]

செய்திகள்

காங்கிரசின் அணுகுமுறையால் திமுக பலவீனமடைந்தது; இந்தியா கூட்டணி கூட்டத்தில் திருமாவளவன் குற்றச்சாட்டு

பாஜகஅரசை எதிர்கொள்வது குறித்தும் புதிய அரசியல் யுக்திகளை ஆலோசனை செய்யவும் எதிர்க்கட்சிகளாக உள்ள இந்தியா கூட்டணி கட்சிகள்  டெல்லியில் இன்று ஆலோசனை நடத்தின.இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, சமாஜ்வாதி உள்பட 23 அரசியல் கட்சிகள் பங்கேற்றன. இந்த கூட்டணியில் இடம்பெற்றிருந்த திமுக இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையால் தேர்தலில் திமுக பலவீனமடைந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் பேசியதாவது, […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே பைக்குகள் மோதல் : 2 பேர் பலி

 கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்தவர் வெள்ளைப்பாண்டி மகன் அருண்பாண்டியன் (23). இவர் நேற்று இரவு நேரத்தில் இளம்புவனத்திலிருந்து கோவில்பட்டி நோக்கித் தனது பைக்கில் வந்துகொண்டிருந்தார். அதே நேரத்தில், சிதம்பராபுரத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் சுப்புராஜ் (36) கோவில்பட்டிக்கு வந்துவிட்டு, மீண்டும் தனது சொந்த ஊருக்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார். கோவில்பட்டி – எட்டயபுரம் சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே இருவரது மோட்டார் பைக்குகளும் வந்தபோது, எதிர்பாராத விதமாக இரண்டு பைக்குகளும் கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு […]