லாட்டரி டிக்கெட் விற்பனை, ஆற்று மணல் திருட்டு: 6பேர் கைது
Oplus_16908288
தூத்துக்குடிதென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் (08.06.2026) சட்டவிரோதமாக லாட்டரி டிக்கெட் விற்பனையில் ஈடுபட்ட 3 எதிரிகள் கைது செய்யப்பட்டனர்.

தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் வழக்குபதிவு செய்து சட்ட விரோதமாக லாட்டரி டிக்கெட் விற்பனையில் ஈடுபட்ட டூவிபுரம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (34), முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த ஜான் (33) மற்றும் பாத்திமா நகரைச் சேர்ந்த ஆல்வின் (44) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து மொத்தம் 6 செல்போன்கள் மற்றும் ரொக்க பணம் ரூபாய் 5,650/- ஆகியவற்றையும் பறிமுதல் செய்தார்.
ஆற்று மணல் திருட்டு

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் திருடிய 3 எதிரிகள் கைதானவர்கள்.
குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் தனலட்சுமி வழக்கு பதிவு செய்து சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட புளியங்குளம் பகுதியை சேர்ந்தவர்களான பாலமுருகன் (25) கருப்பசாமி (24) மற்றும் குளத்தூரை சேர்ந்த சரவணபெருமாள் (23) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 3 யூனிட் மணல் மற்றும் 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தார்.








