• October 21, 2026

Month: June 2026

சினிமா

அரசியலுக்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது ; நடிகர் ராகவா லாரன்ஸ் 

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக தகவல் பரவி வந்தது.  இதனை தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் நான் தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்ற செய்தி பரவி வருகிறது. இப்படி ஒரு தகவல்அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், இது பற்றிய ஒரு விளக்கத்தை தெரிவிக்க விரும்புகிறேன். இது தொடர்பான ஒரு முக்கியமான முடிவை  முடிவை ஜூன் 11-ந்தேதி காலை 9.30 மணிக்கு அறிவிக்க உள்ளதாக ராகவா லாரன்ஸ் […]

செய்திகள்

பாரதிராஜா உடல் அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் அடக்கம்

தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என கொண்டாடப்பட்டவர் பாரதிராஜா. தேனி மாவட்டத்தில் பிறந்து சினிமா மீதுள்ள ஆர்வத்தால் சென்னைக்கு சென்று பிழைப்புக்காக பல வேலைகளை பார்த்து இறுதியாக ‛16 வயதினிலே’ பட வாய்ப்பை பெற்று இயக்குனராக அறிமுகமானார். ஸ்டுடியோவிற்குள் வட்டமிட்டு கொண்டிருந்த சினிமாவை வெளி உலகத்திற்கு அழைத்து வந்த பெருமை இவரேயே சேரும். இயற்கையோடு பின்னிப் பிணைந்த கிராம வாழ்க்கையின் எதார்த்தத்தையும், அந்த மண்ணோடு பிறந்து வளர்ந்த மனித உறவுகளின் மகத்துவத்தையும், மனதிற்கு நெருக்கமாகவும், இதமாகவும் தந்து, […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொள்ளிப் பானை உடைத்து நூதன போராட்டம் 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவில்பட்டியில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாடை கட்டி சங்கு ஊதி, கொள்ளிப் பானை உடைத்து நூதன போராட்டம் நடந்தது.  கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் பல பகுதிகளில் வீடு கட்டி பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் ஏழை எளிய மக்களுக்கு புதியதாக வீட்டுத் தீர்வை வழங்க வேண்டும்.  குடும்ப தலைவர் இறந்தபின் வீட்டுத்தீர்வையை வாரிசுதாரர்கள் பெயரில் தீர்வை மாற்றி வழங்க வேண்டும்.  தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் மந்தித்தோப்பு சாலையை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே இளம்பெண் தற்கொலையில் திடீர் திருப்பம்: கொலை வழக்கு பதிவு செய்து

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு காவல் எல்லைக்குட்பட்ட தெற்கு மயிலோடைப் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவர், கடந்த செவ்வாய்க்கிழமை (9.6.2026) அன்று தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடப்பதாகத் தகவல் கிடைத்தது.  இதனையடுத்து, கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண் உடலைக் கைப்பற்றி, சந்தேக மரணம் என்ற அடிப்படையில் முதற்கட்ட வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த இளம் பெண்ணின் உடல் உடற்கூறாய்வுக்கு […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் அஞ்சல் ஏற்றுமதி மையம்:   நாளை தொடக்கம்

கோவில்பட்டி தலைமை அஞ்சலக வர்த்தகப் பிரிவு சார்பாக கோவில்பட்டி நகர் வாழ் வியாபார பெருங்குடி மக்களுக்கான வெளிநாடு  ஏற்று மதிக்கான பிரத்யேக  ஏற்றுமதி வசதி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் ஆரம்பிக்கப்படவுள்ளது. கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் நாளை 12ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடக்க விழா நடக்கிறது இந்தியா   போஸ்ட்   சர்வதேச அளவில் 160 நாடுகளுடன் வணிக ஒப்பந்தம் செய்துள்ளது இவர்களின் Parcel Packaging Unit மூலமாக சிறப்பான சேவையைத் தொடங்க […]

சினிமா

ரவி தேஜாவின் ‘இருமுடி கட்டு’ஆகஸ்ட் மாதம் தமிழ் ,தெலுங்கில் வெளியாகிறது

நடிகர் ரவி தேஜாவின் முதல் தமிழ்–தெலுங்கு இருமொழிப் படம் ‘இருமுடி கட்டு’  தந்தை–மகள் பாசம், ஆன்மிகம் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ளது . மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தனது ஒவ்வொரு படைப்பின் மூலமும் பான் இந்திய ரசிகர்களுக்கு பிரம்மாண்ட மற்றும் புதிய சினிமா அனுபவத்தை கொடுத்து வருகிறது. பல்வேறு கதைக்களங்கள், உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் பொழுதுபோக்கு என இந்நிறுவனம் தயாரிக்கும் படங்கள் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை சென்றடைந்துள்ளது. நவீன் யெர்னேனி மற்றும் […]

சினிமா

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா ஸ்டைல்’ பாடல் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்தது

லைகா புரொடக்ன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ’சிக்மா’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இயக்குநராக ஜேசன் சஞ்சய் அறிமுகமாகும் இப்படத்தில், சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார்.  உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இந்த திரைப்படம் ஜூலை 31 ஆம் தேதி வெளியாகிறது. திரைத்துறையிலும் வர்த்தகம் வட்டாரத்திலும் இந்தத் திரைப்படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து பேசுபொருளாகியுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், சமீபத்தில் படத்தில் இருந்து வெளியான ‘சிக்மா ஸ்டைல்’ பாடல், […]

செய்திகள்

திமுக கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி விலகியது 

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 75 ஆண்டு கால திராவிட கட்சிகளான திமுக, அதிமுகவை பின்னுக்கு தள்ளி , தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் இல்லாததால் ஆட்சிமையக்க முடியாமல் இருந்தது. இதனை தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்து வந்த காங்கிரஸ் கட்சி அக்கூட்டணியில் இருந்து விலகி முதல் ஆளாக தவெகவுக்கு ஆதரவு  அளித்தது. பின்னர் விசிக, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் […]

தூத்துக்குடி

அரசு பணி தேர்வர்களுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- பணியாளர் தேர்வாணையத்தால் SSC-CGL தேர்விற்கு 12,256 காலிப் பணியிடங்க ளுக்கான  அறிவிப்பு  21.5.2026 அன்று வெளியிடப் பட்டுள்ளது.  தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இத்தேர்வுக்கு தயாராகும்   தூத்துக்குடி மாவட்ட  தேர்வர்கள்    பயன்பெறும்  வகையில் தூத்துக்குடி  மாவட்ட   வேலைவாய்ப்பு அலுவலகத்தில்  கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்   17.6.2026 புதன்கிழமை காலை 10.30 மணியளவில்  துவங்கப்பட உள்ளது.  இந்த […]

செய்திகள்

இயக்குநர் பாரதிராஜா உடல், சொந்த ஊரில் நாளை அடக்கம்

இயக்குநர் பாரதிராஜா (84 வயது) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவரது மகன் மனோஜ் மறைந்த நிலையில், அத்துயரிலிருந்து மீளாத பாரதிராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.வீட்டில் இருந்தபடியே மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி சென்னை நீலாங்கரையில்… உள்ள இல்லத்தில் இயக்குநர் பாரதிராஜா இன்று அதிகாலையில் காலமானார் . 1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான […]