ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா ஸ்டைல்’ பாடல் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்தது
Oplus_16908288
லைகா புரொடக்ன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ’சிக்மா’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இயக்குநராக ஜேசன் சஞ்சய் அறிமுகமாகும் இப்படத்தில், சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இந்த திரைப்படம் ஜூலை 31 ஆம் தேதி வெளியாகிறது.
திரைத்துறையிலும் வர்த்தகம் வட்டாரத்திலும் இந்தத் திரைப்படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து பேசுபொருளாகியுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், சமீபத்தில் படத்தில் இருந்து வெளியான ‘சிக்மா ஸ்டைல்’ பாடல், மிகக் குறுகிய காலத்திலேயே 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
இசை ரசிகர்கள் மற்றும் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த பாடல் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்துள்ளது. இந்த பாடல், இளைஞர்கள் மற்றும் இசை ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீடு உள்ளிட்ட பல முக்கிய அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.







