அரசு பணி தேர்வர்களுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு
Oplus_16908288
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பணியாளர் தேர்வாணையத்தால் SSC-CGL தேர்விற்கு 12,256 காலிப் பணியிடங்க ளுக்கான அறிவிப்பு 21.5.2026 அன்று வெளியிடப் பட்டுள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இத்தேர்வுக்கு தயாராகும் தூத்துக்குடி மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 17.6.2026 புதன்கிழமை காலை 10.30 மணியளவில் துவங்கப்பட உள்ளது.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் கீழ்கண்ட Google படிவத்தை பூர்த்தி செய்து Submit செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது https://forms.gle/38dDUpAsomAbrvWr9
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது








