அதிமுக, அமமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பலர், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வந்து அக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆனந்த் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்பிக்கள் வனரோஜா, இளவரசன், பரமக்குடி முன்னாள் எம்எல்ஏ முருகேசன், முன்னாள் எம்எல்ஏ ரவி, திருநெல்வேலி முன்னாள் மேயர் புவனேஸ்வரி, உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர் இதேபோல், பாஜகவைச் சேர்ந்தவரும், விளவங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். விஜயதரணி, திருப்பூர் […]
சத்யஜோதி பிலிம்ஸ், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான “சீயான் 63” படத்தின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. சீயான் விக்ரமின் 63வது திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார். முன்னதாக “இருமுகன்” திரைப்படத்தின் மூலம் வெற்றிகரமான கூட்டணியை வழங்கிய விக்ரம் – ஆனந்த் சங்கர் இணைவு, சுமார் ஒரு தசாப்தத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் தொடங்கியுள்ள நிலையில், இதற்காக விரிவான முன்தயாரிப்பு […]
‘பிச்சைக்காரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான கவனத்தை ஈர்த்த இயக்குநர் சசி-விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் ‘நூறு சாமி’ படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா, அஜய் திஷான், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல், அருள் தாஸ், மூர்த்தி, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் […]
ஜூன் 18 முதல் “திரிஷ்யம் 3” திரைப்படத்தை ப்ரைம் வீடியோவில் கண்டுகளியுங்கள். ஜீத்து ஜோசப் எழுதி இயக்கியுள்ள இந்த திரில்லர்-டிராமா திரைப்படம், PEN Studios மற்றும் Panorama Studios வழங்க, ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் Aashirvad Cinemas நிறுவனம் மூலம் உருவாகியுள்ளது. மோகன்லால், மீனா மற்றும் சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த கால தவறுகள் மீண்டும் உயிர்ப்பெற்று ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் சூழலில், தனது குடும்பத்தை காப்பாற்றும் பாதுகாவலனாக ஜார்ஜ்குட்டி மீண்டும் களமிறங்குகிறார். […]
சேலம் அருகே நெய்க்காரப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). த.வெ.க. பிரமுகரான இவர் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவர் மீது பாலியல் புகாரை முன்வைத்து பெண் ஒருவர் நேற்று ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- நான் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறேன் .குடும்ப செலவுக்காக நான் சிலரிடம் கடன் வாங்கி உள்ளேன். அந்த கடனை திருப்பி கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டேன். அப்போது நெய்க்காரப்பட்டியை சேர்ந்த ஒருவர் எனக்கு அறிமுகமானார். மேலும் அவர், எனக்கு […]
கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் “உலக குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினம்” இன்று பள்ளி வளாகத்தில் அனுசரிக்கப்பட்டது. நிகழ்விற்கு பள்ளி முதல்வர் பிரபு தலைமை தாங்கினார்.தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜா, கோவில்பட்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆரியங்காவு,ஊரணித் தெரு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் லலிதா மற்றும் பயிற்சி சுகாதார ஆய்வாளர் கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு குழந்தைத் தொழிலாளர் முறையின் தீமைகள், கல்வியின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரை […]
3 நாள் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு, கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்றார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் மங்களூரு சென்றடைந்த முதலமைச்சர் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாகக் காரில் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குச் சென்றார். கோவில் வளாகத்தில் அவருக்கு கோவில் அர்ச்சகர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து, மூலவர் மூகாம்பிகை அம்மனை […]
சட்டசபை தேர்தலில் திமுக தோல்விக்கு அடுக்கடுக்கான காரணங்கள்; மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல்
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் தோல்விக்கு கட்சியின் தலைவர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டதோடு, விரிவான விசாரணைக்காக 38 பேர் கொண்ட கள ஆய்வு குழுவை நியமித்தார். இக்குழுவினர் தொகுதி வாரியாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களிடம் தனித்தனியாகக் கருத்துகளைக் கேட்டறிந்தனர். இந்தத் தகவல்கள் அறிக்கையாகத் தயார் செய்யப்பட்டு, கடந்த ஜூன் 10-ஆம் தேதி மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய விவரங்கள் […]
தூத்துக்குடியில் 75 ஆண்டு காலமாகக் கல்விச் சேவை ஆற்றி வரும் புகழ்பெற்ற வ.உ.சிதம்பரம் கல்லூரியின் நினைவுகளைப் பதிவு செய்யும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்தத் தனித்துவமான “Memorabilia & VOCC Diary” என்னும் நினைவுப் புத்தகத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெளியிட்டார். தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பல தலைமுறை மாணவ, மாணவியர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு இக்கல்லூரி பெரும் ஊன்றுகோலாக இருந்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பவள விழா […]
தூத்துக்குடி மாவட்ட அளவில் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இடையிலான ஆண்கள் ஆக்கி போட்டி கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி ஆக்கி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மற்றும் விடுமுறை நாட்களில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று விளையாட விரும்பும் வீரர்களின் தகுதி 1.1.2010 பின் பிறந்தவராக இருக்க வேண்டும் இப்போட்டியில் விளையாட விரும்பும் பள்ளிகள் 14.6 .2026 திங்கள்கிழமை மாலைக்குள் தங்களது பள்ளி ஆக்கி அணியை பதிவு செய்து கொள்ளுமாறு ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர […]







