கோவில்பட்டியில் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இடையே ஆக்கிபோட்டி
தூத்துக்குடி மாவட்ட அளவில் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இடையிலான ஆண்கள் ஆக்கி போட்டி கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி ஆக்கி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மற்றும் விடுமுறை நாட்களில் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்று விளையாட விரும்பும் வீரர்களின் தகுதி 1.1.2010 பின் பிறந்தவராக இருக்க வேண்டும் இப்போட்டியில் விளையாட விரும்பும் பள்ளிகள் 14.6 .2026 திங்கள்கிழமை மாலைக்குள் தங்களது பள்ளி ஆக்கி அணியை பதிவு செய்து கொள்ளுமாறு ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முகம் பாரதி மற்றும் பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா தெரிவித்தனர்
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 9443190781, 944244902








