கோவில்பட்டி பள்ளியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்
Oplus_16908288

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் “உலக குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினம்” இன்று பள்ளி வளாகத்தில் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்விற்கு பள்ளி முதல்வர் பிரபு தலைமை தாங்கினார்.தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜா, கோவில்பட்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆரியங்காவு,ஊரணித் தெரு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் லலிதா மற்றும் பயிற்சி சுகாதார ஆய்வாளர் கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கு குழந்தைத் தொழிலாளர் முறையின் தீமைகள், கல்வியின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரை ஆற்றப்பட்டது.
குழந்தைகளுக்கான உதவி எண் 1098 குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
“குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது வறுமைக்கு தீர்வாகாது. கல்வி மட்டுமே அவர்களின் வாழ்கையை உயர்தும் ஆயுதம்” என்று வலியுறுத்தப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் “குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம், கல்வியைப் போற்றுவோம்” என்ற முழக்கங்களுடன்
மாணவர்கள் அனைவரும் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
ஆசிரியர்கள் இந்துமதி, உமாராணி ஆகியோர் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர்.

இந்நிகழ்வில் கோவில்பட்டி நகராட்சி தூய்மை இந்திய திட்ட பரப்புரையாளர்கள் காளிராஜ், மாலதி, முத்துமாரி, கவிதா, பள்ளி ஆசிரியர்கள் மாரிச்சாமி, ஸ்ரீதரன், ரேகா, மகாலட்சுமி, சண்முகத்தாய், முருகேசன், உமா சங்கரி மற்றும் அனைத்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை மாணவிகள் அனுஜா மற்றும் தாரணி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.







