மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை துரை வைகோ எம்.பி. டெல்லியில் சந்த்தித்து பேசினார்/. இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் அவரது அலுவலகத்தில் சந்தித்து உரையாடினேன்.அப்போது, திருச்சிக்கு மிக முக்கியமான தேவையாக உள்ள உலர் துறைமுகம் (Dry Port / Inland Container Depot – ICD) அமைக்க வேண்டும் என்ற எனது நீண்டகால கோரிக்கையை நினைவூட்டி, மீண்டும் எடுத்துரைத்தேன். திருச்சியில் உலர் துறைமுகம் அமைப்பது […]
கோவையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நாகர்கோவில் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பஸ் இன்று அதிகாலை கோவில்பட்டி மூப்பன்பட்டி விலக்கு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில், நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த இசக்கி என்பவர் ஓட்டி வந்த சிமெண்ட் கலவை டேங்கர் லாரியின் பிரேக் திடீரென பழுது ஏற்பட்டதால், லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு பழுதை சரிசெய்ய முயன்றார். அப்போது லாரி நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் எச்சரிக்கை குறியீடுகள் எதுவும் வைக்கப்படாத நிலையில், பின்னால் வந்த […]
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த வெல்லமண்டி நடராஜன், அவர் (ஓ.பி.எஸ்.) திமுகவில் இணைந்த பிறகு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்து கொண்டார். அவருக்கு அங்கு அமைப்புச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், த.வெ.க. தலைவரும் தமிழ்நாடு முதல்-அமைச்சருமான ஜோசப் விஜய், டெல்லி பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த்தை நேரில் சந்தித்து வெல்லமண்டி நடராஜன் த.வெ.க.வில் இணைந்துள்ளார். மேலும் அவரின் மகன் ஜவஹர்லால் நேரு […]
தூத்துக்குடி மாவட்ட தொழில் முனைவோர் மற்றும் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளவர்களின் வசதிக்காக, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் (TIIC) சார்பில் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை ஒரு மாத சிறப்புத் தொழில் கடன் முகாம் நடைபெற உள்ளது. மாநில அளவில் மிக முக்கிய நிதி நிறுவனமாகச் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கி வரும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியைப் பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு […]
தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் முதலாவது ஆசியன் மிதக்கும் (ப்ளோட்டிங்) யோகாசன போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெற்றது . இதில் இந்தியா உள்பட 5 நாட்டு வீரர்கள் பங்கு பெற்றனர். இந்திய யோகா அணி சார்பாக தமிழ்நாடு வீரர், வீராங்கனைகள் 28 பேர் கலந்து கொண்டார்கள். இப்போட்டியில் தமிழக வீரர்கள் 17 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம் பதக்கம் பெற்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்து உள்ளனர். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளை இந்தியன் ப்ளோட்டிங் […]
கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் நடைபெற்று வரும் அகில இந்திய ஆக்கி போட்டியின் 6ம் நாள் நடைபெற்ற 21வது லீக் போட்டியில் சென்னை சரக்கு மற்றும் சேவை வரி & மத்திய உற்பத்தி வரி அணியும் கர்நாடகா பெல்லாரி அணியும் மோதின. இதில் 8:4 என்ற கோல் கணக்கில் சென்னைசரக்கு மற்றும் சேவை வரி மத்திய உற்பத்தி வரி அணி வெற்றி பெற்றது. மாலை 5.15 மணிக்கு நடைபெற்ற 22வது லீக் போட்டியில் பெங்களூரு கனரா வங்கி […]
பிரதமர் மோடியுடன் முதல்-அமைச்சர் விஜய் சந்திப்பு; தமிழக திட்டங்களுக்கு நிதியளிக்க கோரிக்கை
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லி சென்றார், முதலமைச்சர் விஜய்க்கு, டெல்லி விமான நிலையத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்திற்குச் சென்ற முதலமைச்சர் விஜய்க்கு, திகார் சிறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு காவல் துறை சிறப்புப் படையணி சார்பில் கௌரவ […]
விஜய்க்கு ஆதரவளித்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மன்னிப்பு கடிதம் கொடுத்தனர்
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின் அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் மற்றொரு அணியும் என 2 ஆக பிரிந்தது. இதில் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பினர் தவெகவுக்கு ஆதரவு அளித்தனர். தொடர்ந்து இரு தரப்பினரிடையே பிரச்சினை அதிகரித்து வந்தது. அதிமுக கொறடாவாக தங்களை நியமிக்கக்கோரி இரு தரப்பினரும் சபாநாயகரிடம் மனு அளித்தனர். இதற்கிடையே எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் […]
கோவில்பட்டி அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தில் உள்ள காட்டுகோவில் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இங்கு சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது…. நேற்று இரவு அந்த கட்டிடத்தில் சிலர் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு கட்டிடம் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த புளியங்குளத்தை சேர்ந்த அய்யப்பன்(வயது 30), விருதுநகர் மாவட்டம் புல்லகவுண்டன்பட்டியை சேர்ந்த மாலதி ஆகியோர் கட்டிட… இடிபாடுகளுக்குள் சிக்கி […]
கோவில்பட்டியில் மே15 முதல் 26ம்தேதி வரை நடந்த புத்தகத் திருவிழா நிறைவு பெற்றது, இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. புத்தகத் திருவிழாவிற்கு வருகை தந்த வாசகர்களில் குலுக்கல் முறையில் 3 நபர்கள் தேர்வு செய்யப்பட்டதில் முதல் பரிசாக பராசக்தி என்பவருக்கு ரூ3000 மதிப்பிலான புத்தகங்களும்,இரண்டாம் பரிசாக கோகிலவாணி என்பவருக்கு ரூபாய் 2000மதிப்பிலான புத்தகங்களும்,மூன்றாம் பரிசாக கோபிநாத் என்பவருக்கு ரூபாய் ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் 12ம் […]







