கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கி: லீக் போட்டிகள் நிறைவு
Oplus_16908288
கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் நடைபெற்று வரும் அகில இந்திய ஆக்கி போட்டியின் 6ம் நாள் நடைபெற்ற 21வது லீக் போட்டியில் சென்னை சரக்கு மற்றும் சேவை வரி & மத்திய உற்பத்தி வரி அணியும் கர்நாடகா பெல்லாரி அணியும் மோதின.

இதில் 8:4 என்ற கோல் கணக்கில் சென்னைசரக்கு மற்றும் சேவை வரி மத்திய உற்பத்தி வரி அணி வெற்றி பெற்றது.
மாலை 5.15 மணிக்கு நடைபெற்ற 22வது லீக் போட்டியில் பெங்களூரு கனரா வங்கி அணியும் கோவில்பட்டி எஸ். டி.ஏ.டி எக்ஸலன்ஸ் அணி யும் மோதின.
இதில் 5:2 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி எக்ஸலன்ஸ் அணி வெற்றி பெற்றது.
மாலை 6.45 மணிக்கு நடைபெற்ற 23வது லீக் போட்டியில் மும்பை யூனியன் வங்கி அணியும் மும்பை இந்தியன் நேவி அணியும் மோதின.
இரவு 8.15 ஆட்டத்தில் 3:2 என்ற கோல் கணக்கில் மும்பை இந்தி யன் நேவி அணி வெற்றி பெற்றது.

இரவு 9 மணிக்கு நடைபெற்ற 24வது லீக் போட்டியில், ஜலந்தர் பஞ்சாப் & சிந்து வங்கி அணியும் ஜலந்தர் ஆர்மி கிரீன் அணியும் மோதின.
இதில் 3:3 என்ற கோல் கணக்கில் ஜலந்தர் பஞ்சாப்சிந்து வங்கி அணி மற்றும் ஜலந்தர் ஆர்மி கிரீன் அணி சமநிலைப் பெற்றது. இத்துடன் லீக் போட்டிகள் நிறைவடைந்தன.
அடுத்து காலிறுதி மற்றும் அரை இறுதி போட்டிகள் நடைபெற்று இறுதிப்போட்டி நடக்க இருக்கிறது







