ஆசிய மிதக்கும் யோகாசன போட்டி: தமிழ்நாடு வீரர், வீராங்கனைகள்17 தங்கம் வென்றனர்
தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் முதலாவது ஆசியன் மிதக்கும் (ப்ளோட்டிங்) யோகாசன போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெற்றது .

இதில் இந்தியா உள்பட 5 நாட்டு வீரர்கள் பங்கு பெற்றனர். இந்திய யோகா அணி சார்பாக தமிழ்நாடு வீரர், வீராங்கனைகள் 28 பேர் கலந்து கொண்டார்கள்.
இப்போட்டியில் தமிழக வீரர்கள் 17 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம் பதக்கம் பெற்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்து உள்ளனர்.
வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளை இந்தியன் ப்ளோட்டிங் யோகாசன கூட்டமைப்பின் தலைவர் வெ. கோவிந்தராஜ், பொதுசெயலாளர் மா. மாரியப்பன் ஆகியோர் பாராட்டினார்கள்.








