கோவில்பட்டி மாலையம்மன் கோவில் வைகாசி பொங்கல் பெருந்திருவிழா முன்னிட்டு கால்நாட்டு விழா நடைபெற்றது. இதனையொட்டி காலை 8 மணிக்கு செல்வ விநாயகருக்கு மஞ்சள், பால், தயிர் உட்பட 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய சாமி முருகன் சாமி செய்தனர். தொடர்ந்து கால்நாட்டு ஊர்வலமாக எடுத்து சென்று மாலையம்மன் கோவிலில் நடப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் […]
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் 108 இடங்களை பிடித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை பதவியேற்க அழைக்காமல் முட்டுக்கட்டை போட்டு வரும் தமிழக பொறுப்பு கவன்ரை கண்டித்து கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி மற்றும் கோவில்பட்டி நகர, வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார், நகரத் தலைவர் அருண்பாண்டியன், வட்டாரத் தலைவர் ரமேஷ் […]
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, மக்களவையில் திமுக உறுப்பினர்களுக்குத் தனியாக இருக்கை வசதி ஒதுக்கித் தர வேண்டும் என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் உடனான கூட்டணி முடிவுக்கு வந்துள்ள நிலையில், மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அருகிலேயே திமுக உறுப்பினர்கள் அமர்வது இனி பொருத்தமாக இருக்காது என்று அக்கடிதத்தில் கனிமொழி சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல்களைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றம் அவசியமாகிறது […]
தமிழ்நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. கோவில்பட்டி கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தூத்துக்குடி மாவட்ட அளவில் மூன்றாம் இடமும், கோவில்பட்டி கல்வி மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்து சாதனை படைத்துள்ளது. கடந்த நான்கு ஆண்டு காலமாக இப்பள்ளி கோவில்பட்டி கல்வி மாவட்ட அளவில் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. இப்பள்ளியில் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்வு எழுதிய 62 மாணவர்களும் […]
கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் சக்கரத்தாழ்வார் நகரைச் சேர்ந்தவர் முனியசாமி. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுகாசினி மற்றும் 2 பெண் குழந்தைகள் மட்டும் இங்கு வசித்து வருகின்றனர். தற்போது குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் சுகாசினி தனது 2 குழந்தைகளுடன் வெளிநாட்டில் உள்ள கணவரை பார்க்க கடந்த 15 நாட்களுக்கு முன்பு புறப்பட்டு சென்றுள்ளார். அந்த சமயத்தில் அவருடைய வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அருகில் இருந்தவர்கள் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்துக்கு […]
கோவில்பட்டியில் நாளை மே 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பாக ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சீனியர் ஆண்கள் மாநில ஆக்கி சாம்பியன் போட்டி தூத்துக்குடி வ உ சி துறைமுக ஆணைய கோப்பைக்காக நடத்தப்பட உள்ளது இப்போட்டியில் 35 மாவட்ட சீனியர் ஆக்கி அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன. நாளை சனிக்கிழமை காலை 6.30 மணி அளவில் முதல் போட்டியாக தூத்துக்குடி மாவட்ட அணியும் திண்டுக்கல் […]
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8-ஆம் தேதி) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகின்றன. இந்த ஆண்டு முதல் முறையாக வாட்ஸ்அப் மூலம் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சுமார் 8.27 லட்சம் மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், தேர்வுத்துறை முடிவுகளை வெளியிடத் தயாராக உள்ளது. கடந்த மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 27,475 மாணவ, மாணவிகள் எழுதினர். […]
கோவில்பட்டி ஸ்டெபி ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் 4ம் ஆண்டு கோடைகால மகளிர் கபடி பயிற்சி முகாம் முத்து நகரில் நடைபெற்றது. 21 நாட்கள் நடைபெற்ற பயிற்சி முகாமில் 40க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கூசாலிபட்டி, காந்தி நகர், பாண்டவர்மங்கலம், புது கிராமம், மந்தி தோப்பு, முத்து நகர்,ஆலம்பட்டி, ஈராச்சி, எப்போதுவென்றான் ஆகிய கிராமங்களில் இருந்து பங்குபெற்றனர். பயிற்சியின் நிறைவு விழா முத்து நகரில் நடைபெற்றது இந்த பயிற்சி முகாமிற்கு ஆசிரியர்கள் முத்துக்குமார் கோவில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பத்மா, […]
தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 59 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்ற உதய நிதி ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம். என்று தெரிகிறது. இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டார். திமுக சட்டமன்றக் குழு தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, ஆ.ராசா,… திருச்சி சிவா, கனிமொழி, பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதனையடுத்து, திமுக தலைவர் […]
தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காதது குறித்து கவர்னர் மாளிகை அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை த.வெ.க. நிரூபிக்கவில்லை. பலத்தை நிரூபித்தால்தான், ஆட்சி அமைக்க உரிமை கோர முடியும். சட்டசபையில் யார் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமென கவர்னர் கருதுகிறாரோ, அவரையே ஆட்சி அமைக்க அழைக்க அரசியல் சாசனம் வழிவகை செய்கிறது. தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், போதுமான பலம் இருப்பதை கவர்னரிடம் உறுதிப்படுத்த வேண்டும். கவர்னரின் இந்த முடிவை அரசியல் சாசனப்பிரிவு […]







