கோவில்பட்டியில் கோடைகால மகளிர் கபடி பயிற்சி முகாம்
Oplus_16908288
கோவில்பட்டி ஸ்டெபி ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் 4ம் ஆண்டு கோடைகால மகளிர் கபடி பயிற்சி முகாம் முத்து நகரில் நடைபெற்றது.

21 நாட்கள் நடைபெற்ற பயிற்சி முகாமில் 40க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கூசாலிபட்டி, காந்தி நகர், பாண்டவர்மங்கலம், புது கிராமம், மந்தி தோப்பு, முத்து நகர்,ஆலம்பட்டி, ஈராச்சி, எப்போதுவென்றான் ஆகிய கிராமங்களில் இருந்து பங்குபெற்றனர்.
பயிற்சியின் நிறைவு விழா முத்து நகரில் நடைபெற்றது இந்த பயிற்சி முகாமிற்கு ஆசிரியர்கள் முத்துக்குமார் கோவில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பத்மா, எம் எம் வித்யாஷ்ரம் பள்ளி உடற்கல்வி இயக்குனர் ஜோதி, ஆசிரிய குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைத்து வீராங்கனைகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினர்.

இதற்கான ஏற்பாடுகளை அகடாமியின் இயக்குனர் செந்தூர் கனி மற்றும் அகடாமின் முதன்மை பயிற்சியாளர் முனைவர் கரிகாலன் மற்றும் பயிற்சியாளர் ஜேசா ஆகியோர் செய்திருந்தனர்.







