ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை த.வெ.க. நிரூபிக்கவில்லை; கவர்னர் மாளிகை விளக்கம்
தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காதது குறித்து கவர்னர் மாளிகை அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை த.வெ.க. நிரூபிக்கவில்லை. பலத்தை நிரூபித்தால்தான், ஆட்சி அமைக்க உரிமை கோர முடியும். சட்டசபையில் யார் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமென கவர்னர் கருதுகிறாரோ, அவரையே ஆட்சி அமைக்க அழைக்க அரசியல் சாசனம் வழிவகை செய்கிறது. தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், போதுமான பலம் இருப்பதை கவர்னரிடம் உறுதிப்படுத்த வேண்டும்.

கவர்னரின் இந்த முடிவை அரசியல் சாசனப்பிரிவு 361-ன் படி எளிதில் கேள்வி கேட்க முடியாது.
பெரும்பான்மை இருக்கிறது என விஜய் நிரூபித்தால் அடுத்த நிமிடம் கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார்.
தமிழ்நாட்டில் நிலையான அரசு அமைய வேண்டும் என்பதில் கவர்னர் உறுதியாக உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பல்வேறு விளக்கங்களை கூறி கவர்னர் தற்போதைய சூழலில் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.







