தமிழக கவர்னருடன் விஜய் மீண்டும் சந்திப்பு

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களை கைப்பற்றியது. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்துள்ள நிலையில், தற்போதுள்ள தவெகவின் பலம் 112 ஆக உள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், மற்ற கட்சிகள் தவெகவுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கவில்லை.

முன்னதாக, தவெக தலைவர் விஜய், நேற்று மாலை கவர்னர் அர்லேகரை சந்தித்தார். அப்போது தங்களை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி கவர்னரிடம் கடிதம் வழங்கினார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு விஜய்க்கு இல்லாததால், அவரை ஆட்சியமைக்க வரும்படி கவர்னர் அழைக்கவில்லை.
இந்த பரபரப்பான சூழலில், தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் கவர்னரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தங்களை
ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என கவர்னரிடம் விஜய் கோரிக்கை வைத்துள்ளார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் சட்டசபையில்பெரும்பான்மையை நிரூபிப்பேன் எனவும் கவர்னரிடம் விஜய் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக கூறப்பட்டது. கவர்னர் – விஜய் இடையேயான சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது.

அப்போது கவர்னரிடம் விஜய், “113 எம்.எல்.ஏ.க்களை மட்டும் வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் எப்படி ஆட்சி அமைப்பீர்கள்?. 234 எம்எல்ஏக்களை கொண்ட தமிழ்நாடு சட்டசபையில் 113 எம்எல்ஏக்களை வைத்துக் கொண்டு நிலையான அரசு அமைக்க முடியுமா..?. 113 எம்எல்ஏக்கள் மட்டுமே இருப்பதால் வேறு எந்த கட்சிகளின் ஆதரவு தவெகவிற்கு கிடைக்கும்..?. இவ்வாறு கேள்விகள் கேட்டுள்ளார்.
பெரும்பான்மைஇருக்கிறது என நிரூபித்தால் மட்டுமே விஜய்க்கு முதல்-அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க கவர்னர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடிக்கும் நிலையில் சட்ட. நிபுணர்களுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்தினார். பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் தவெக
நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விஜய் பதவியேற்பு நிகழ்வு குறித்தும் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்தும் தவெக எம்.எல்.ஏ.க்களுடன் பனையூரில் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.







