12ம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் மாணவி விஷாலி முதலிடம்
Oplus_16908288
தமிழ்நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.
கோவில்பட்டி கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தூத்துக்குடி மாவட்ட அளவில் மூன்றாம் இடமும், கோவில்பட்டி கல்வி மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்து சாதனை படைத்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டு காலமாக இப்பள்ளி கோவில்பட்டி கல்வி மாவட்ட அளவில் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. இப்பள்ளியில் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்வு எழுதிய 62 மாணவர்களும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவி விஷாலி 600 க்கு 594 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
வணிகவியல், பொருளியல், வணிக கணிதம் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மேலும் தமிழ் 98, ஆங்கிலம் 97, அக்கவுண்டன்சி 99 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்.
கணிதம், வணிக கணிதம், வணிகவியல், பொருளியல், கணினி அறிவியல் பாடங்களில் இப்பள்ளியில் தலா ஒரு மாணவர் வீதம் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி தாளாளர், இயக்குனர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் தங்களது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.







