திருவள்ளூர் தெற்கு மாவட்ட தவெக செயலாளராக இருப்பவர் பிரகாசம் என்கிற குட்டி. தவெக வேட்பாளர் பட்டியலை அந்த கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்ட போது பிரகாசம் என்கிற குட்டி பூந்தமல்லி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு திருவள்ளூரில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தவெக மாநில பொதுச் செயலாளர் ஆனந்த் கலந்து கொண்டார. திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் பிரகாசம் என்கிற குட்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். […]
அமெரிக்க-ஈரான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் காரணமாக எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டது. குறிப்பாக வர்த்தக சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. எனவே சிலிண்டர்கள் பதுக்குவதை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபடும்படி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. கோவை மாவட்டத்தில் கலெக்டர் பவன்குமார் உத்தரவின்பேரி லும், ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனாஅறிவுறுத்தலின்படியும் மதுரை மண்டல சூப்பிரண்டு ஸ்ரீநிவாச பெருமாள் கண்காணிப்பில், கோவை போலீஸ் துணை சூப்பிரண்டு மரியமுத்து தலைமையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர […]
.தூத்துக்குடி சிப்காட் தொழில்பேட்டை வளாகப் பகுதியில் தனியார் ஏற்றுமதி நிறுவனத்திற்குச் சொந்தமான பஞ்சு கிடங்கு ஒன்று உள்ளது. இங்கு வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக ஏராளமான பஞ்சு மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. நேற்று சனிக்கிழமை பிற்பகலில், கிடங்கின் ஒரு பகுதியில் திடீரென தீப் பிடித்து எரியத் தொடங்கியது. பஞ்சு என்பதால் தீ மளமளவென கிடங்கு முழுவதும் பரவி, கரும்புகை வானை முட்டியது. இது குறித்துத் தகவல் அறிந்த மாவட்ட அலுவலர் கருணாகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், மூன்று தீயணைப்பு வாகனங்களில் […]
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம். எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் கூ.பிரேம்குமார், முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான். நம்முடைய சகோதரர்தான். எனவே, தற்போதைய சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் நமது முன்னாள் நிர்வாகியான கூ.பிரேம்குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சி பெட்டி சின்னத்தையும் நமது தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். […]
தேர்தல் பணிக்கு நியமிக்கப்படும் ஆசிரியர்கள் வாக்கு சாவடிகளுக்கு செல்லவும் நள்ளிரவில் வீடு திரும்பவும்
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தூத்துக்குடி மாவட்டக் கிளை நிர்வாகிகள்,மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்த மனுவில் முக்கிய கோரிக்கைகள் வருமாறு :- *காத்திருப்போர் பட்டியல் (Reserve List) தேர்தல் பணிக்காகக் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 20 சதவீதப் பணியாளர்களை ஒரே இடத்தில் தங்கவைக்காமல், ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒருவராகப் பிரித்து அனுப்ப வேண்டும். இதன் மூலம் பணி நெருக்கடி குறையும் மற்றும் மனித உழைப்பு வீணாவது தவிர்க்கப்படும். * வாகன வசதி […]
கோவில்பட்டி, முத்துநகர் ஸ்டெபி ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்தும் கோடைகால இலவச பெண்கள் கபடி பயிற்சி முகாம் நேற்று (ஏப்ரல் 17) தொடங்கியது மே 7 வரை நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் காந்திநகர், கூசாலிபட்டி, புதுக்கிராமம், பாண்டவர்மங்கலம், செண்பகப்பேரி, முத்துநகர், சண்முக நகர், மந்தித்தோப்பு ஆகிய கிராமங்களில் இருந்து சுமார் 40 வீராங்கனைகள் காலை மாலை என இருவேளை பங்கேற்கிறார்கள் இந்த முகாமின் சிறப்பு பயிற்சியாளர் முனைவர் அ.கரிகாலன்.22 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் செயின்ட் […]
தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்கவே தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்பட்டது; ராகுல் காந்தி
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெற இருக்கிறது. மே 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உள்ளன. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் தமிழகத்தில் தி.மு.க. – காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார். முன்னதாக இன்று காலை 8.30 மணிக்கு டெல்லியில் […]
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி இன்று சனிக்கிழமை சென்னை அருகே பொன்னேரியில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இதைத் தொடர்ந்து 20ந் தேதி (திங்கட்கிழமை) தமிழகத்தில் மீண்டும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் ஒரே நாளில் 3 பொதுக்கூட்டங்களில் அவர் உரையாற்றுகிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் 20 ந் தேதி காலை […]
விளாத்திகுளம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் நாராயணன் மற்றும் போலீசார் விருசம்பட்டி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 3 நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (38), ராஜ் (28), குளத்துரைச் சேர்ந்த சுரேந்திரன் (32) ஆகியோர் என்பதும் அவர்கள் சட்டவிரோத விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனடியாக மேற்படி […]
கோடை விடுமுறை கால நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தூத்துக்குடி மற்றும் மும்பை (CSMT) இடையே சிறப்பு ரெயில்கள் (14 சேவைகள்) இயக்கப்பட உள்ளதாக மத்திய ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வண்டி எண் 01005 (மும்பை – தூத்துக்குடி): ஏப்ரல் 21 முதல் ஜூன் 2 வரை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நள்ளிரவு 00:30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் முற்பகல் 11:30 மணிக்குத் தூத்துக்குடி வந்தடையும். வண்டி எண் 01006 (தூத்துக்குடி – மும்பை): ஏப்ரல் 22 முதல் ஜூன் […]







