தேர்தல் பணிக்கு நியமிக்கப்படும் ஆசிரியர்கள் வாக்கு சாவடிகளுக்கு செல்லவும் நள்ளிரவில் வீடு திரும்பவும் வாகன வசதி; தூத்துக்குடி ஆட்சியருக்கு கோரிக்கை
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தூத்துக்குடி மாவட்டக் கிளை நிர்வாகிகள்,மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்த மனுவில்
முக்கிய கோரிக்கைகள் வருமாறு :-

*காத்திருப்போர் பட்டியல் (Reserve List) தேர்தல் பணிக்காகக் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 20 சதவீதப் பணியாளர்களை ஒரே இடத்தில் தங்கவைக்காமல், ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒருவராகப் பிரித்து அனுப்ப வேண்டும். இதன் மூலம் பணி நெருக்கடி குறையும் மற்றும் மனித உழைப்பு வீணாவது தவிர்க்கப்படும்.
* வாகன வசதி 22.4.2026 அன்று பயிற்சி மையத்திலிருந்து வாக்குச் சாவடிகளுக்குச் செல்லவும், தேர்தல் முடிந்த பின் 23.4.2026 நள்ளிரவில் இல்லம் திரும்பவும் உரிய வாகன வசதி செய்து தரப்பட வேண்டும்.
* ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடியை வாட்சப் குழுக்கள் மூலம் 22.4.2026 அன்றே அறிந்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும். இது அவர்கள் பயண ஏற்பாடுகளைச் செய்ய உதவியாக இருக்கும்.
*தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு அலுவலர்கள் அனைவருக்கும் தடையின்றி உணவு கிடைப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

*100% வாக்குப்பதிவு தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் தபால் வாக்கு அல்லது தேர்தல் பணிச்சான்று மூலம் தங்களது ஜனநாயகக் கடமையை 100 சதவீதம் ஆற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
மேற்கண்டவாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது







