கோவில்பட்டியில் கோடைகால இலவச பெண்கள் கபடி பயிற்சி முகாம்
Oplus_16908288
கோவில்பட்டி, முத்துநகர் ஸ்டெபி ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்தும் கோடைகால இலவச பெண்கள் கபடி பயிற்சி முகாம் நேற்று (ஏப்ரல் 17) தொடங்கியது

மே 7 வரை நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் காந்திநகர், கூசாலிபட்டி, புதுக்கிராமம், பாண்டவர்மங்கலம், செண்பகப்பேரி, முத்துநகர், சண்முக நகர், மந்தித்தோப்பு ஆகிய கிராமங்களில் இருந்து சுமார் 40 வீராங்கனைகள் காலை மாலை என இருவேளை பங்கேற்கிறார்கள்
இந்த முகாமின் சிறப்பு பயிற்சியாளர் முனைவர் அ.கரிகாலன்.22 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் செயின்ட் ஜான்ஸ் உடற் கல்வியியல் கல்லூரிமுன்னாள் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.








