தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23-ந்தேதி நடைபெற்றது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது. 4 நாட்களில் மொத்தம் 7 ஆயிரத்து 599 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. 234 தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 918 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 2.365 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 11 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளர்கள் தங்களது சொத்து விவரங்களை வேட்புமனுவில் குறிப்பிட்டு இருந்தனர். […]
ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவர், சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த இரண்டு இளம்பெண்கள் மற்றும் ஒரு வாலிபர் குடிக்கத் தண்ணீர் கேட்டனர். மாரியம்மாள் தண்ணீர் எடுக்க வீட்டிற்குள் சென்றபோது, அவரை பின்தொடர்ந்த 3 பேர்களும் , திடீரென அவரது கண்ணில் மிளகாய்ப்பொடியைத் தூவி தாக்கினர். இதையடுத்து, மாரியம்மாள் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் 1 பவுன் மோதிரத்தை பறித்து, அந்த கும்பல் தப்பிச் […]
ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்டங்களுக்கு இடையிலான மாநில ஆக்கி சாம்பியன் போட்டி நடத்தப்பட்டு வருகிறது;. இந்த ஆண்டு (2026) VOC Port Authority Trophy சீனியர் ஆண்கள் மாநில ஆக்கி சாம்பியன் போட்டி மே 9 முதல் 13ஆம் தேதி வரை கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி ஆக்கி மைதானத்திலும் செயற்கைப்புல் ஆக்கி மைதானத்திலும் நடத்த இருக்கிறார்கள். இந்த போட்டி தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவில்பட்டி பசுவந்தனை மெயின் ரோட்டில் அமைந்துள்ள சுபாஷ் […]
கோவையில் நாளை ஏப்ரல் 28ஆம் தேதி முதல் மே 2 தேதி வரை ஜூனியர் ஆண்கள் மாநில ஆக்கி சாம்பியன் போட்டி நடைபெற உள்ளது போட்டியில் தமிழகத்தில் உள்ள 33 மாவட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன அதில் ஏ பிரிவில் தூத்துக்குடி, திருச்சி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, ஆகிய மாவட்ட அணிகள் விளையாடுகின்றன போட்டிகள் அனைத்தும் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடத்தப்படுகின்றன நடப்புச் சாம்பியன் ஆன \ தூத்துக்குடி மாவட்ட அணி […]
கோவில்பட்டி நாடார் உயர்நிலைப்பள்ளி 1974-1977 ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்கம், தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனன இணைந்து மாதம் தோறும் நான்காவது ஞாயிறுதோறும் இலவசகண்சிகிச்சைமுகாம் நடத்தி வருகிறார்கள். ஏப்ரல் மாத கடைசி ஞாயிறு 26-4-26 அன்று கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயிண்ட் பால்ஸ் உயர்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மாணவர் சங்க தலைவர் ஜி.ஜெயராஜ் தலைமை தாங்கினார்.செயலாளர் என்.ராஜவேல் மற்றும் சங்க […]
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்த ஜெயலதாபணி நிறைவு பெற்றார் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் முதல் தலைமையாசிரியர் வரை 38 ஆண்டுகள் பணிபுரிந்த ஜெயலதாவிற்கு பணி நிறைவு பாராட்டு கூட்டம் நடத்தப்பட்டது பள்ளிக்கூட வளாகத்தில் நடந்த நிகழ்விற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி தலைமை தாங்கினார்.. மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்க கல்வி) பாஸ்கரன், (இடைநிலை கல்வி)ஜான் பிரிட்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியை உஷா ஜோஸ்பின் […]
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் அருகே உள்ளது மேல களக்குடி என்ற ஊரை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவர், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆவார். இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருந்தனர். மகள் காவியா(வயது 26), எம்.ஏ., பி.எட். வரை படித்திருந்தார். அவர் அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வந்தார். காவியா மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (26) என்பவர் கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. […]
தமிழ்நாட்டில் 3 கோடியே 80 லட்சம் எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் இயங்குகின்றன. அதில், இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 3 கோடியே 20 லட்சம் ஆகும்.வாடகை கார்கள், வேன்கள் மட்டுமே 10 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளன. நான்கு சக்கர வாகனங்கள் இவ்வளவு இருந்தும் தமிழக போக்குவரத்து துறையில் டிரைவர்களாக பதிவு செய்துள்ளர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 12 ஆயிரம் என்ற அளவிலேயே உள்ளது. இவ்வாறு பதிவு செய்தவர்களில் அரசு பஸ் டிரைவர்களும் அடங்குவார்கள். இதைவைத்து பார்க்கும்போது, […]
நாடு முழுவதும் சுமார் 28 லட்சம் பேர் எழுதவுள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், சித்தா, ஆயுர் வேதா மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறக்கூடிய மாணவ-மாணவிகள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மிகக் குறைந்த கட்டணத்தில் படிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் நாடு முழுவதும் நீட் தேர்வு எழுதுவதற்கு மாணவ- மாணவிகள் தயாராகி வருகிறார்கள். எம்.பி.பி.எஸ்., மருத்துவ […]
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உட்கோட்டத்திற்குட்பட்ட குளத்தூர் அருகே, இலங்கைக்குக் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,400 கிலோ பீடி இலைகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். கல்லூரணி பகுதியில் இருந்து கடல் வழியாக பீடி இலைகள் கடத்தப்படவுள்ளதாக க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர்கள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து மற்றும் காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் அடங்கிய குழுவினர் […]







