கோவில்பட்டி முகாமில் இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கு 28 பேர் தேர்வு
இலவச கண் பரிசோதனை
கோவில்பட்டி நாடார் உயர்நிலைப்பள்ளி 1974-1977 ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்கம், தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனன இணைந்து மாதம் தோறும் நான்காவது ஞாயிறுதோறும் இலவசகண்சிகிச்சைமுகாம் நடத்தி வருகிறார்கள்.

ஏப்ரல் மாத கடைசி ஞாயிறு 26-4-26 அன்று கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயிண்ட் பால்ஸ் உயர்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மாணவர் சங்க தலைவர் ஜி.ஜெயராஜ் தலைமை தாங்கினார்.செயலாளர் என்.ராஜவேல் மற்றும் சங்க நிர்வாகிகள் முத்து கிருஷ்ணன்,ராஜேந்திரன், பாலசுப்ரமணியன்,ராஜேந்திரன்,அருள்ஜான்,பாலகுமார், சம்பத்குமார் ஆகியோர் முன்னிலையில் முகாம் நடைபெற்றது.
முகாமில் 106 நோயாளிகள் பரிசோதனைகள் மேற்கொண்டு கண்புரை இலவச அறுவை சிகிச்சைக்கு 28 பேர் தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.








