மாநில ஜூனியர் சாம்பியன் ஆக்கிப்போட்டி: தூத்துக்குடி மாவட்ட அணியினர் கோவை பயணம்
கோவையில் நாளை ஏப்ரல் 28ஆம் தேதி முதல் மே 2 தேதி வரை ஜூனியர் ஆண்கள் மாநில ஆக்கி சாம்பியன் போட்டி நடைபெற உள்ளது போட்டியில் தமிழகத்தில் உள்ள 33 மாவட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன
அதில் ஏ பிரிவில் தூத்துக்குடி, திருச்சி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, ஆகிய மாவட்ட அணிகள் விளையாடுகின்றன போட்டிகள் அனைத்தும் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடத்தப்படுகின்றன

நடப்புச் சாம்பியன் ஆன \ தூத்துக்குடி மாவட்ட அணி கடந்த ஒரு வாரமாக கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமின் இறுதியில் 18 பேர் கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் ஆக்கி அணியை. ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி அறிவித்தார் வீரர்கள் பெயர் விவரம் வருமாறு
கோல் கீப்பர்:-முத்து ராஜேஷ் , ஈஸ்வர் பாபு ,
தடுப்பு ஆட்டக்காரர்கள்:-நவீன் குமார் ,ராகுல், தனுஷ் பாண்டியன், அழகு மோகன பிரியன் , கௌதம், அருண், சிபி யுவராஜ், கிரி செல்வன்,
முன் கள ஆட்டக்காரர்கள்:- விஷால், சுகுமார், முருகேஸ்வரன், பூல் பாண்டி ,முகுந்தன், கௌதம், கபிலன், பரத்

அணியின் பயிற்சியாளராக முத்துக்குமார் மேலாளராக காளிமுத்து பாண்டியராஜா துணை பயிற்சியாளராக மாயாண்டி அணியின் மருத்துவராக பாலாஜி இருப்பார்கள்.
நாளைய போட்டியில் பங்கேற்க கோவில்பட்டியில் இருந்து மாவட்ட ஜூனியர் ஆக்கி அணியினர் மற்றும் பயிற்சியாளர்கள் இன்று திங்கட்கிழமை காலை கோவை புறப்பட்டு சென்றனர்,







