கோவில்பட்டியில் மாநில ஆக்கி போட்டி; மே 9 முதல் 5 நாட்கள் நடக்கிறது

ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்டங்களுக்கு இடையிலான மாநில ஆக்கி சாம்பியன் போட்டி நடத்தப்பட்டு வருகிறது;.
இந்த ஆண்டு (2026) VOC Port Authority Trophy சீனியர் ஆண்கள் மாநில ஆக்கி சாம்பியன் போட்டி மே 9 முதல் 13ஆம் தேதி வரை கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி ஆக்கி மைதானத்திலும் செயற்கைப்புல் ஆக்கி மைதானத்திலும் நடத்த இருக்கிறார்கள்.

இந்த போட்டி தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவில்பட்டி பசுவந்தனை மெயின் ரோட்டில் அமைந்துள்ள சுபாஷ் பில்டர்ஸ் அலுவலகத்தில் உரிமையாளர் சண்முகராஜா தலைமையில் நடைபெற்றது,.
உடற்கல்வி ஆசிரியர் திருச்செல்வம் அனைவரையும் வரவேற்றார் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி போட்டிகள் நடத்துவது குறித்து ஆலோசித்து தன்னார்வலர்களை நியமித்தார்
ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி பொருளாளர் காளிமுத்து பாண்டி ராஜா உள்பட 30க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மணிவண்ணன் நன்றி கூறினார்
கூட்டத்தின் போது போட்டிக்கான சின்னம் வெளியிடப்பட்டது 5 நாட்கள் போட்டிகள் நடைபெறும் இப் போட்டியில் மொத்தம் 35 மாவட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர் லீக் போட்டிகள் அனைத்தும் நாடார் மேல்நிலைப்பள்ளி ஆக்கி மைதானத்திலும் நாக்அவுட் சுற்று, கால் இறுதி ,அரை இறுதி , மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் செயற்கைப்புல் ஆக்கி மைதானத்திலும் நடைபெறும்
ஒவ்வொரு போட்டிக்கும் சிறந்த வீரர்களுக்கான விருது வழங்கப்படும் இறுதியில் வெற்றி பெறும் முதல் நான்கு இடம்பெறும் மாவட்ட அணிகளுக்கு வ உ சி துறைமுக கோப்பை வழங்கப்படும்

போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் அனைவருக்கும் தங்கும் இடம் உணவு போக்குவரத்து அனைத்தும் இலவசம் சிறப்பாக விளையாடும் வீரர்களை தேர்வு குழுவினர் தேர்வு செய்து ஒடிசாவில் நடைபெறும் சீனியர் தேசிய ஆக்கி போட்டியில் விளையாட தமிழக அணிக்காக விளையாட அழைத்துச் செல்லப்படுவர்







