கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளி தலைமை ஆசிரியை பணிநிறைவு
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்த ஜெயலதாபணி நிறைவு பெற்றார்
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் முதல் தலைமையாசிரியர் வரை 38 ஆண்டுகள் பணிபுரிந்த ஜெயலதாவிற்கு பணி நிறைவு பாராட்டு கூட்டம் நடத்தப்பட்டது

பள்ளிக்கூட வளாகத்தில் நடந்த நிகழ்விற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி தலைமை தாங்கினார்..
மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்க கல்வி) பாஸ்கரன், (இடைநிலை கல்வி)ஜான் பிரிட்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உதவி தலைமை ஆசிரியை உஷா ஜோஸ்பின் அனைவரையும் வரவேற்றார்.
மாநில தொடக்க கல்வி இயக்குனர் நரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியை ஜெயலதாவுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.

விருதுநகர் மாவட்ட தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் சுப்புராஜ் , கோவில்பட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் ராஜ்குமார்,முத்து முருகன் ,கண்ணன்,ரவி மாணிக்கம்,ஆசியா பார்ம்ஸ் பாபு, முன்னாள் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள்,தலைமையாசிரியர்கள்.பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்,பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள்,ஆசிரியர்கள்,கல்வித்துறை அலுவலர்கள்,பள்ளி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியை ஜெயலதா ஏற்புரை வழங்கினார்.பள்ளி ஆசிரியர் பிரவீன் நன்றி கூறினார்.







