கோவில்பட்டி சகாராவை தாண்டாத ஒட்டகம் கல்வி பயிற்சி நிறுவனமும் இலக்கியச் சாரலும் இணைந்து மகளிர் தினத்தை முன்னிட்டு அதிர்ஷ்டசாலிகள் அன்றைய பெண்களா? இன்றைய பெண்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்தின,. கோவில்பட்டி விஸ்வாஸ் மற்றும் சிவதாம் கல்வி அறக்கட்டளை தியான கூடத்தில் பட்டிமன்றம் நடந்நது. கிருஷ்ணன் வரவேற்று பேசினார்,. ஞான ஒளி மலர் இந்திராணி தொடக்க உரையாற்றினார். பட்டிமன்றத்தில் அதிஷ்டசாலிகள் அன்றைய பெண்களே? என்று தேசிய நல்லாசிரியர் விநாயக சுந்தரி, வானொலி புகழ் சுப்புலட்சுமி, எழுத்தாளார் இராஜலட்சுமி […]
2000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இயேசுவின் சிலுவை சாவினை கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி என்று நினைவு கூர்ந்து கொண்டாடி வருகிறார்கள் பெரிய வியாழனான நேற்று இயேசு கிறிஸ்துவை யூதாஸ் காட்டிக் கொடுத்தபின் யூதர்களால் சிறைபிடிக்கப்பட்டு அவருக்கு மரணத் தீர்ப்பிடப்பட்ட பின் இயேசு கிறிஸ்துவிற்கு தலையில் முள்முடி சூட்டப்பட்டு சிலுவையை சுமந்து கொண்டு கல்வாரி மலையை நோக்கி காவலர்கள் இழுத்து செல்லும்போது அவரை சவுக்கால் அடித்து துன்பபடுதத்துவர்…அவர் உடல் முழுவதும் ரத்தம் சிந்தி சிலுவையில் அறையப்பட்டு […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலில் 21 வது ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 6.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், புண்ணியாகவாஜனம், கும்ப பூஜை, சண்முகர் ஜெபம், வேதிகா அர்ச்சனை, சுப்பிரமணியர் காயத்ரி ஹோமம் மற்றும் பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து காலை 9.10 மணிக்கு மூலவர், விநாயகர் மற்றும் தண்டபாணி விமான கலசங்களுக்கு புனித நீர் […]
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆட்சியர் பொறுப்பு ஏற்றவுடன் முதல்வேலையாக இந்த பணியை ஆட்சியர் விஷு மகாஜன் மேற்கொண்டார். தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாகப் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அளிக்கும் புகார்கள் எவ்வாறு பதிவு செய்யப்படுகின்றன என்பது குறித்து ஆட்சியர் […]
கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மேற்படிப்பிற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிச் செயலாளர் வக்கீல் செல்வம் தலைமை தாங்கினார். பள்ளி குழு உறுப்பினர் செல்வம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம்.கல்லூரி செயலாளர் சுமீ கண்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பள்ளி முதல்வர் பிரபு அனைவரையும் வரவேற்றார். வழிகாட்டுதல் நிகழ்ச்சியை எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி பேராசிரியர் முனைவர் செல்வலட்சுமி மற்றும் உதவிப் பேராசிரியர் சுருதி ஆகியோர் பத்தாம் வகுப்பு […]
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நாகஜோதியை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி,. நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தேர்தல் பிரசாரத்தின் போது கனிமொழி எம்.பி.; பேசியதாவது:- இஸ்லாமியர்களுக்கு எதிரான சிஏஏ சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது அதை எடப்பாடி பழனிசாமி ஆதரித்தார். அதற்குப் பிறகு நாடாளுமன்ற தேர்தல் வந்தபோது அந்த கூட்டணியிலிருந்து விலகினார். அப்போது நான் பண்ணியது மிகப் பெரிய தப்பு. இனிமேல் பாஜகவோடுட எனக்கு […]
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நிரந்தர டி.ஜி.பி. நியமிக்கப்படவில்லை. பொறுப்பு டி.ஜி.பி.யாக வெங்கடராமன் பணியாற்றி வந்தார். இதுகுறித்து அரசியல் கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தன. சட்டம் ஒழுங்குக்கு நிரந்தர டி.ஜி.பி.யை நியமிக்கவில்லை என்பதால் தமிழகத்தில் குற்றங்கள் பெருகி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதற்கிடையே டி.ஜி.பி. நியமனத்திற்காக 3 பேர் கொண்ட பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. அதில் சீமா அகர்வால், சந்தீப் ராய் ரத்தோர், ராஜீவ்குமார் ஆகியோரின் பெயர்கள் இடம் […]
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி ஒருவர், சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. குளத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வந்தனர். கொலை நடந்து 9 நாட்களுக்கு பிறகு ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்மமுனீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டார். காவல்துறையினர் இந்த வழக்கின் தீவிரத்தைக் […]
தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு, மர்ம நபர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அதில், நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது விரைவில் வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்துத் தகவல் அறிந்ததும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில், வெடிகுண்டு கண்டறியும் மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவினர் உடனடியாக நீதிமன்றத்திற்கு விரைந்தனர். நீதிமன்றத்தின் அனைத்து நுழைவு வாயில்கள், விசாரணை […]
தூத்துக்குடி போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு தனிப்படை போலீசார், நேற்று (வியாழக்கிழமை) தாளமுத்துநகர் மொட்டை கோபுரம் சாலைப் பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த நபரைத் நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த செய்யது இப்ராகிம் (வயது 44) என்பது தெரியவந்தது. அவர் தன்னிடம் இருந்த வலி நிவாரணி மருந்துகளைப் போதைக்காகச் சட்டவிரோதமாக விற்பனை செய்யக் கொண்டு சென்றது உறுதி செய்யப்பட்டது. அவரிடம் […]







