அதிர்ஷ்டசாலிகள் அன்றைய பெண்களா? இன்றைய பெண்களா? பட்டிமன்றம்
கோவில்பட்டி சகாராவை தாண்டாத ஒட்டகம் கல்வி பயிற்சி நிறுவனமும் இலக்கியச் சாரலும் இணைந்து மகளிர் தினத்தை முன்னிட்டு அதிர்ஷ்டசாலிகள் அன்றைய பெண்களா? இன்றைய பெண்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்தின,.
கோவில்பட்டி விஸ்வாஸ் மற்றும் சிவதாம் கல்வி அறக்கட்டளை தியான கூடத்தில் பட்டிமன்றம் நடந்நது. கிருஷ்ணன் வரவேற்று பேசினார்,. ஞான ஒளி மலர் இந்திராணி தொடக்க உரையாற்றினார்.

பட்டிமன்றத்தில் அதிஷ்டசாலிகள் அன்றைய பெண்களே? என்று தேசிய நல்லாசிரியர் விநாயக சுந்தரி, வானொலி புகழ் சுப்புலட்சுமி, எழுத்தாளார் இராஜலட்சுமி ஆகியோர் பேசினார், இன்றைய பெண்களே? என்று முனைவர்கள் முருகசரஸ்வதி, செல்வம், பவானி ஆகியோர் கருத்துக்களை எடுத்து வைத்து வாதிட்டனர்,
முனைவர் பிரபு வாழ்த்துரை வழங்க நல்லாசிரியர் ஜான் கணேசன் நடுவராக இருந்து, அதிர்ஷ்டசாலிகள் இன்றைய பெண்களே என்று தீர்ப்பு வழங்கினார்,. இசை.எப்.எம் கோ.சுரேஷ்குமார் நன்றி கூ =றினார். சிறப்பு விருந்தினராக தில்லைராஜன் யசோதை, பேச்சியம்மாள், நாகராஜன், கிராம நிர்வாக அதிகாரி முருகானந்த் , ஆர்.எஸ்.ராஜேஷ், கம்பன் கழக தலைவர் துரைப்பாண்டி, விளாத்திகுளம் பாரதி மன்றத் தலைவர் முத்துப்பாண்டி, கவிஞர் நல்லாசிரியர் வரகவி முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்,.

இலக்கியச் சாரல் நிறுவனர் தினகரன் அடுத்து நடைபெறும “உணவும் வாழ்வும்” என்ற நேரடி விளக்க பயிற்சியின் நோக்கம் பற்றிய செய்தியை அறிவித்து அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற அழைப்பு விடுத்து கூட்டத்தை நிறைவு செய்தார்.







