புனிதவெள்ளி: இயேசுவின் சிலுவைப்பாதை நிகழ்வு
2000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இயேசுவின் சிலுவை சாவினை கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி என்று நினைவு கூர்ந்து கொண்டாடி வருகிறார்கள்
பெரிய வியாழனான நேற்று இயேசு கிறிஸ்துவை யூதாஸ் காட்டிக் கொடுத்தபின் யூதர்களால் சிறைபிடிக்கப்பட்டு அவருக்கு மரணத் தீர்ப்பிடப்பட்ட பின் இயேசு கிறிஸ்துவிற்கு தலையில் முள்முடி சூட்டப்பட்டு சிலுவையை சுமந்து கொண்டு கல்வாரி மலையை நோக்கி காவலர்கள் இழுத்து செல்லும்போது அவரை சவுக்கால் அடித்து துன்பபடுதத்துவர்…அவர் உடல் முழுவதும் ரத்தம் சிந்தி சிலுவையில் அறையப்பட்டு ,சிலுவை மரத்தில் தொங்க விடப்பட்டார்.

இந்நிகழ்வுகளை இளையோர் இயக்கத்தினர் தத்ரூபமாக நடித்தனர் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் உயிர் பிரிந்தது அந்த உடலை ஒரு வெள்ளை துணியில் போர்த்தி கல்லறையில் அடக்கம் செய்தனர், இதை நினைவு படுத்தும் வகையில் கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் புனித வெள்ளி நிகழ்வுகள் காலை 5 மணி முதல் தொடர் ஆராதனை நடைபெற்றது
பின்னர் மாலை 3 மணிக்கு இயேசு கிறிஸ்து கல்வாரி மலையில் சிலுவையில் அறையைப் பட்டதை நினைவுகூர்ந்து இயேசு சிலுவையை சுமந்து கொண்டு செல்லும் 14 இடங்களில் சிலுவைப்பாதை நிகழ்வுகளை திருத்தல பங்குத்தந்தை அருள்ராஜ் அடிகளார், உதவி பங்குத்தந்தை குழந்தைராஜ் அடிகளார் இணைந்து இந்த இறை நிகழ்வுகளை நடத்தினார்கள்.இதில் இறைமக்கள் கலந்து கொண்டனர்.








