சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலில் வருஷாபிஷேக விழா

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலில் 21 வது ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று நடந்தது.
இதையொட்டி காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 6.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், புண்ணியாகவாஜனம், கும்ப பூஜை, சண்முகர் ஜெபம், வேதிகா அர்ச்சனை, சுப்பிரமணியர் காயத்ரி ஹோமம் மற்றும் பூர்ணாகுதி நடந்தது.

தொடர்ந்து காலை 9.10 மணிக்கு மூலவர், விநாயகர் மற்றும் தண்டபாணி விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி வருஷாபிஷேகம் நடந்தது. பின்னர் காலை 10.30 மணியளவில் மூலவர் கதிர்வேல் முருகனுக்கு 11 வகையான அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாரதனை நடந்தது.
தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பூஜைகளை ஹரிஹர பட்டர், அரவிந்த் பட்டர் செய்தனர்.








