பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நிறைவடைய சில தினங்களே உள்ள நிலையில், பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் நீடித்து வந்தது. இதற்கிடையே டெல்லியில் இந்த பட்டியல் ஆழமாக பரிசீலிக்கப்பட்டு இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டதாக தெரிகிறது.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக, 27 தொகுதிகளில் களம் காண்கிறது. அதிமுக ஒதுக்கிய 27 தொகுதிகளில் சிலவற்றை பாஜக மாற்றிக் கோருவது, ஒரே தொகுதிக்கு பல முனைப் போட்டி நிலவுவது மற்றும் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையை தேர்தலில் போட்டியிட வைக்க மேலிடம் அழுத்தம் கொடுப்பது போன்ற காரணங்களால் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 27 பேர் கொண்ட பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இதில் பல நட்சத்திர வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இதன்படி சாத்தூரில் நயினார் நாகேந்திரன், மயிலாப்பூரில் தமிழிசை, கோவை வடக்கில் வானதி சீனிவாசன், அவிநாசியில் எல்.முருகன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். அதே சமயம் அண்ணாமலை போட்டியிடவில்லை. வேட்பாளர்கள் வீவரம்வருமாறு:_
ஆவடி – ராஜசிம்ம மகேந்திரா
மயிலாப்பூர் – தமிழிசை சவுந்தரராஜன்
தளி – நாகேஷ்குமார்
திருவண்ணாமலை – ஏழுமலை
ராசிபுரம் (தனி) – பிரேம்குமார்
மொடக்குறிச்சி – கிருத்திகா சிவக்குமார்
உதகை – போஜராஜன்
அவிநாசி (தனி) – எல்.முருகன்
திருப்பூர் தெற்கு – தங்கராஜ்
கோவை வடக்கு – வானதி சீனிவாசன்
திரூவாரூர் – கோவி சந்துரு
தஞ்சாவூர் – முருகானந்தம்
கந்தர்வகோட்டை (தனி)- உதயகுமார்
புதுக்கோட்டை – ராமச்சந்திரன்
அறந்தாங்கி – கவிதா ஸ்ரீகாந்த்
திருப்பத்தூர் – திருமாறன்
மானாமதுரை (தனி) – பொன் பாலகணபதி
மதுரை தெற்கு – ராம ஸ்ரீனிவாசன்
சாத்தூர் – நயினார் நாகேந்திரன்
ராமநாதபுரம் – நாகேந்திரன்
திருச்செந்தூர் – ராதாகிருஷ்ணன்
வாசுதேவநல்லூர் (தனி) – ஆனந்தன் ஐயாசாமி
ராதாபுரம் – பாலகிருஷ்ணன்
நாகர்கோவில் – காந்தி
குளச்சல் – சிவக்குமார்
பத்மநாபபுரம் – ரமேஷ்
விளவங்கோடு – விஜயதாரணி








