கோவில்பட்டி பள்ளியில் மேற்படிப்பிற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி
கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மேற்படிப்பிற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிச் செயலாளர் வக்கீல் செல்வம் தலைமை தாங்கினார். பள்ளி குழு உறுப்பினர் செல்வம் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம்.கல்லூரி செயலாளர் சுமீ கண்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பள்ளி முதல்வர் பிரபு அனைவரையும் வரவேற்றார். வழிகாட்டுதல் நிகழ்ச்சியை எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி பேராசிரியர் முனைவர் செல்வலட்சுமி மற்றும் உதவிப் பேராசிரியர் சுருதி ஆகியோர் பத்தாம் வகுப்பு முடித்த பின்பு மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பிற்கும் அல்லது டிப்ளமோ படிப்பிற்கும் செல்ல வேண்டுமென்றால் எந்த வகையான பாடப்பிரிவுகள் அவர்களுடைய வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்கும் என்பதை பல்வேறு உதாரணங்களுடன் விளக்கி பேசினார்கள்.
மேலும் மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் அவர்கள் சரியான விளக்கங்களை கூறினர். இந்த நிகழ்வில் ஆசிரியர்கள் இந்துமதி, செல்வவிமலா, சீனித்தாய், ராஜா, மாரிச்சாமி மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர். முக்டிவில் ஆசிரியர் உமாராணி நன்றி கூறினார்.








