தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் சுமார் 9,000 அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்றது. இதில் வாக்குப்பதிவு அலுவலர்கள் (நிலை 1, 2, 3) மற்றும் மண்டல அலுவலர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். தேர்தல் […]
கோவை தெற்கு, பர்கூர், பாலக்கோடு உள்ளிட்ட தொகுதிகளில் தி.மு.க.வினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்காளர்களுக்கு ரூ.8 ஆயிரம் கூப்பன் வழங்கி வருவதாக அ.தி.மு.க. குற்றஞ்சாட்டியதுடன், தேர்தல் ஆணையத்தில் அதுதொடர்பாக புகார் அளித்துள்ளது. அ.தி.மு.க. மாநில வழக்கறிஞரணி துணை செயலாளரான ஆர்.ஏ.எஸ். செந்தில்வேல் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பிய புகார் மனுவில் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் தி.மு.க.வினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்காளர்களுக்கு ரூ.8 […]
தவெக தலைவர் விஜய் தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: “மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தற்போதுள்ள 543-லிருந்து 850 ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட ‘அரசியலமைப்பு (131-ஆவது திருத்தம்) மசோதா, 2026’ மூலம், நாடாளுமன்ற அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இந்த மசோதா, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது. ஆனால், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான […]
அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன. இந்த நோக்கில் அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா-2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா-2026 ஆகிய 3 மசோதாக்களை மத்திய அரசு .. முன் மொழிந்து உள்ளது. இந்த மசோதாக்கள் நாளை (வியாழக்கிழமை) கூட உள்ள நாடாளுமன்ற சிறப்பு… கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன. இதையொட்டி நேற்று இந்த மசோதாக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தமிழக முதல்-அமைச்சர் […]
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ், கடல் வளத்தைப் பாதுகாக்கவும் மீன் உற்பத்தியைப் பெருக்கவும் ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலம் 61 நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது. அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலம் மீன்கள் முட் டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலத்தில் விசைப்படகுகளின் எந்திர இரைச்சல் மற்றும் ராட்சத வலைகளால் மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கவே ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை கடலுக்கு ‘ஓய்வு’ அளிக்கப்படுகிறது. இதன் மூலம் […]
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் தமிழ் புத்தாண்டு சித்திரை மாதம் முதல் நாள் அன்று பாரம்பரியமாக பஞ்சாங்கம் வாசிப்பது வழக்கம். அதன்படி ராமேசுவரம் கோவிலில் நேற்று சாமி சன்னதி முதல் பிரகாரத்தில் சோமாஸ்கந்தர் சன்னதி எதிரே பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக பஞ்சாங்கம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து கோவிலின் குருக்கள் உதயகுமார் வருகிற ஓராண்டில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து பஞ்சாங்கத்தில் இடம் பெற்று இருந்த தகவல்களை வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பல வெளிநாட்டு […]
கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக ஒவ்வொரு மாதமும் அன்னதானம் நடைபெறுகிறது.. இதன் தொடர்ச்சியாக தமிழ் பு புத்தாண்டை முன்னிட்டு செண்பகவல்லி அம்மன் பூவன நாத சுவாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட மங்கள விநாயகர் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களை பராசக்தி மேட்ச் இன்டஸ்ட்ரீஸ் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். லட்சுமி டெக்கரேஷன் சண்முகவேல், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணைப் பொதுச் செயலாளர் கணேசன், முன்னாள் ராணுவ வீரர் […]
தவெக தலைவர் விஜய், இன்று (ஏப்ரல் 14) திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக சேலம் 6 வழிச்சாலை வழியாக பிரசார வாகனத்தில் அவர் திருப்பூருக்கு வருகை தந்தார். பெருமாநல்லூர் பகுதியில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் காலை முதலே திரண்டிருந்தனர். திருப்பூர் பகுதியில் இன்று வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால், காத்திருந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கோவை சூலூர் தொகுதி வேட்பாளர் சுகுமார், கணியூர் சுங்கச்சாவடியில் விஜய்யை […]
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பிள்ளையார்நத்தம் கிராமத்தில் சித்திரை முதல் தேதியான இன்று பொன்னேர் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 60 டிராக்டர்கள் கலந்து கொண்டு ஊர் நாட்டாமை அப்பாசாமி நாயக்கர் புஞ்சையில் ஒன்று கூடி அங்கு நனைய போட்ட பச்சரிசி, கம்பரிசி, மற்றும் நிறை நாழி கம்பு, நெல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. சூரிய பகவானுக்கும் தீபாராதனை காட்டப்பட்டது. இந்த பூஜையை தச்சர் குமார் ஆசாரி, கொல்லர் ஆறுமுகம் ஆசாரி ஆகியோர் முன் நின்று […]
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் திமுக கூட்டணியில் திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ளார். […]







