கோவில்பட்டி அருகே விவசாயிகள் ஒன்றுகூடி நடத்திய பொன்னேர் திருவிழா
Oplus_16908288





தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பிள்ளையார்நத்தம் கிராமத்தில் சித்திரை முதல் தேதியான இன்று பொன்னேர் திருவிழா நடைபெற்றது.
இந்த விழாவில் சுமார் 60 டிராக்டர்கள் கலந்து கொண்டு ஊர் நாட்டாமை அப்பாசாமி நாயக்கர் புஞ்சையில் ஒன்று கூடி அங்கு நனைய போட்ட பச்சரிசி, கம்பரிசி, மற்றும் நிறை நாழி கம்பு, நெல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. சூரிய பகவானுக்கும் தீபாராதனை காட்டப்பட்டது.

இந்த பூஜையை தச்சர் குமார் ஆசாரி, கொல்லர் ஆறுமுகம் ஆசாரி ஆகியோர் முன் நின்று பாரம்பரிய வழக்கப்படி நடத்தினார். அத்துடன் நவதானியங்கள் , பருத்தி விதைகள் தூவியும், புஞ்சையில் உள்ள முள் செடி மற்றும் வேண்டாத களை செடிகள் அகற்றப்பட்டு, விதை தூவப்பட்டது. பின்னர் 60 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் ஒன்று போல் சித்திரை முதல் நாள் உழவு அதாவது நாள் ஏர் உழவு செய்யப்பட்டது.
இந்த விழாவில் தேசிய விவசாயிகள் சங்க தலைவர் வழக்கறிஞர் ரெங்கநாயகலு, மற்றும் பொன்னுஸ் கலந்து கொண்டு நவதானியங்களை விதைத்தார்.
பொன்னேர் விழாவில் விவசாயிகள் கனகராஜ்,சௌந்தரராஜன், ராஜாராம், முனியசாமி, குருராஜ், ஆழ்வார்சாமி நாயக்கர், வேலுசாமி, சீனிவாசன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வந்திருந்த விவசாயிகளுக்கு இனிப்பும், நனைந்த பச்சரிசி, கம்பு அரிசி, வெற்றிலை பாக்கு பரிமாறப்பட்டது. ஊருக்குள் நுழைந்த விவசாயிகளுக்கு குலவை இட்டு வரவேற்றும் தாய்மார்கள் அனைவர்க்கும் பானக்கரம், மோர் போன்றவை வழங்கினார்கள். அத்துடன் முறைப் பெண்கள் மஞ்சள் தண்ணீர் ஊற்றினார்கள்.

முன்னதாக ஊரில் இருந்து கிளம்பும்போது பெருமாள் கோவிலில் வழிபாடு மற்றும் விவசாயிகள் கொடி ஏற்றம் செய்தும் முதல் ஆளாக ஊர் நாட்டாமை குங்குவார் அப்பாசாமி நாயக்கர், ஊர் vm வகையறா ( பின்ன பெத்தவ வகையறா ) பாமூர்த்திவார் ராமச்சந்திரப்ப நாயக்கர் வீட்டில் இருந்து பூஜைக்கு தேவையான பொருள்கள் மேள தாளத்துடன் எடுத்து வரப்பெற்றது.
i







