கோவில்பட்டியில் ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் அன்னதானம்
கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக ஒவ்வொரு மாதமும் அன்னதானம் நடைபெறுகிறது.. இதன் தொடர்ச்சியாக தமிழ் பு புத்தாண்டை முன்னிட்டு செண்பகவல்லி அம்மன் பூவன நாத சுவாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட மங்கள விநாயகர் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களை பராசக்தி மேட்ச் இன்டஸ்ட்ரீஸ் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். லட்சுமி டெக்கரேஷன் சண்முகவேல், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணைப் பொதுச் செயலாளர் கணேசன், முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவில்பட்டி வட்டாட்சியர் அப்பனராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக வணிக வைசிய சங்க தலைவர் வெங்கடேஷ், கோவில்பட்டி நுகர் பொருள் வின விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் ராஜா, கோவில்பட்டி கடலை மிட்டாய் வியாபாரிகள் சங்கத் தலைவர் கார்த்தீஸ்வரன், வேலவன் கன்சல்டன்சி பழனி மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமரன் பொங்கல் பிரசாதம் வழங்கினார். காவல்துறை கண்காணிப்பாளர் ஜெகநாதன் அன்னதானத்தை தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், தலைவர் ஜெயக்கொடி , செயலாளர் ஜோதி காமாட்சி, பொருளாளர் கார்த்திகேயன் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் பாலமுருகன், சண்முகசுந்தரம், மாரிமுத்து , எஸ் பி பாண்டியன், தங்கராஜ், தொழிலதிபர்கள் நாகஜோதி மேட்ச் மகேஷ், தங்கவேல் ,மகேந்திரன், தனபால் ,கொல்லம் சேகர் ,ஆக்ரா காளிராஜ் ,பஜ்ரங் நர்த்தனாலயா கணபதி ,பசுமை இயக்கம் செந்தில், அறக்கட்டளை வழக்கறிஞர் கார்த்திக், ஏழாயிரம்பண்ணை பாண்டி, நாகஜோதி மேட்ச் பாலமுருகன், வரதராஜன், சாய் ஸ்டூடியோ நாகராஜா, கேமராமேன் ராஜா. ஆசிரியர்கள் அன்பழகன் ,ஆனந்த செல்வன் ,ராஜ்குமார், ராமமூர்த்தி ,குமாரசாமி, பூ ல் பாண்டியன், ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அன்னதான ஏற்பாடுகளை தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர் செய்திருந்தனர். கமலேஷ்வர் மேட்ச் ஒர்க்ஸ் அதிபர் நடராஜன் நன்றி கூறினார்







