• October 21, 2026

Month: February 2026

செய்திகள்

தவெக விருப்ப மனுக்கள் வினியோகம்  50 ஆயிரம் ; திரும்பி வந்தது 5

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், முதல் முறையாக களம் இறங்கும் தவெகவில் கடந்த 6-ந் தேதி முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது. 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் முதல் நாளே 10 ஆயிரம் விருப்ப மனுக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் வாங்கப்பட்டன. கூட்டம் அதிகமாக இருந்ததால், பனையூர் பகுதியே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால்,விருப்ப மனுக்கள் வாங்க நேரில் வரவேண்டாம். ஆன்லைன் வழியாக வாங்கி கொள்ளலாம் […]

செய்திகள்

சென்னை-தூத்துக்குடி இடையே விரைவில் வந்தே பாரத் ரெயில்

தமிழகத்தில் சென்னை சென்டிரல் – மைசூரு, சென்னை சென்டிரல் – கோவை, சென்னை எழும்பூர்-நெல்லை, சென்னை எழும்பூர் – நாகர்கோவில் உள்பட 8 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளிடம் ஏகோபித்த ஆதரவை பெற்றதால், பல வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்களில் பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. புதிய வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரெயில்களை இயக்க பயணிகள் மத்தியில் இருந்து கோரிக்கைகள் வருகின்றன. இந்த நிலையில், சென்னை எழும்பூர் – தூத்துக்குடி, தஞ்சாவூர் – மைசூரு இடையே […]

செய்திகள்

மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுக்காததால், காங்கிரஸ் தலைமை மீது திமுக அதிருப்தி

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள  காங்கிரஸ் கட்சி இந்த முறை ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறது. ‘ஆட்சியில் பங்கு’ என்று காங்கிரஸ் கட்சியினர் பேசத் தொடங்கியபோதே, திமுக தலைமை அதற்கு மறுப்பு தெரிவித்தது. ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்ற கொள்கையுடன் செயல்பட்டு வரும் நாங்கள் இதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று மறுத்துவிட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதி மணி உள்ளிட்டோர் […]

செய்திகள்

டாஸ்மாக் ஊழியர்களின இன்றைய வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு

டாஸ்மாக் நிறுவன தொழிற்சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (18.2.2026) வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், நேற்று மாலையில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனையடுத்து இன்று (18.02.2026) மற்றும் நாளை (19.02.2026) என இரண்டு நாட்களும் அமைச்சர் முன்பு பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதால், வேலை நிறுத்தப் போராட்டம் தாற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் […]

செய்திகள்

தமிழக அரசின் கடன் ரூ. 10.62 லட்சம் கோடியாக அதிகரிக்கும்: அமைச்சர் தங்கம்

தமிழ்நாடு சட்ட சபையில் 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். அப்போது மாநிலத்தின் கடன் அளவு பற்றி பேசினார். தங்கம் தென்னரசு கூறியதாவது::- ”ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பில், மத்திய அரசு மாநில அரசுகளை நியாயமற்ற முறையில் நடத்திய பல நிகழ்வுகள் கடந்த காலங்களில் கண்டுள்ளோம். எனினும், இந்த அரசு எதிர்கொண்டுவரும் சவால்கள் முன்னெப்போதும் தமிழ்நாடு சந்தித்திராத ஒன்று. தமிழ்நாட்டிற்கு பெரிய உட்கட்டமைப்புத் திட்டங்களை மறுப்பது, மத்திய அரசு […]

செய்திகள்

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 3 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்; அமைச்சர்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது,. தலைமைச் செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, மேயா் ஜெகன் பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினா் ராதாகிருஷ்ணன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் பேசியதாவது:- திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் ஏற்கனவே வெல்வோம் 200 வரலாறு படைப்போம் என்று கூறியதிற்கிணங்க எல்லோரும் பணியாற்றி வரும் நிலையில் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட 3 […]

செய்திகள்

தமிழக இடைக்கால பட்ஜெட்டில் திட்டங்களுக்கான  நிதி ஒதுக்கீடு விவரம்

தமிழக சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதில் இட்டம்பெற்றுல்லா திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு விவரம் வருமாறு:- * அரசு ஊழியர்கள் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் – ரூ.1,55,977 கோடி * மகளிர் விடியல் பயண திட்டம் – ரூ.4,000 கோடி * அரசு பேருந்து டீசல் மானியத்துக்கு நிதி – ரூ.1,857 கோடி * மாணவர்களுக்கு கட்டணமில்லா பஸ் பாஸ் – ரூ.1,782 கோடி * உங்கள் தொகுதியில் […]

செய்திகள்

இடைக்கால பட்ஜெட்: சட்டசபையில் “காதுகுத்தும் விழா” என அழைப்பிதழ் வெளியிட்டு அ.தி.மு.க. விமர்சனம்

தமிழக சட்டசபையில் இன்று பிப்ரவரி 17 அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த  நிலையில் இடைக்கால  பட்ஜெட் என்ற பெயரில் தமிழக அரசு மக்களுக்கு காது குத்துவதாக அ.தி.மு.க. விமர்சனம் செய்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் கூறியிருப்பதாவது:- கடந்த நாலரை ஆண்டுகளாக பட்ஜெட் என்னும் பெயரில் தமிழ்நாடு மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காது குத்தும் விழா இந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. நாள்: பிப்ரவரி 17, 2026 இடம்: தமிழக சட்டமன்றம் நேரம்: காலை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கல்லூரியில் கணிதத்துறை தேசிய கருத்தரங்கு

கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி கணிதத்துறை சார்பாக ஒரு நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. கல்லுாரிச் செயலர் ப.மகேந்திரன் வழிகாட்டுதலின்படி கல்லுாரியின் முதல்வர் (பொ) மூ.சுப்புலெட்சுமி கருத்தரங்கினை தொடக்கி  வைத்தார். மேலும் கணிதத்துறையின் இணைப்பேராசிரியர் எ.சுசிலா அனைவரையும் வரவேற்றார். இக்கருத்தரங்கிற்கு மருதை, பேராசிரியர் (ஓய்வு), பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி, செல்வக்குமார், பேராசிரியர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், திருநெல்வேலி, உமாதேவி, இணைப்பேராசிரியர், HKBK பொறியியல் கல்லுாரி, பெங்களூர் மற்றும் முனைவர் கில்பர்ட் […]

கோவில்பட்டி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அடியோடு அகற்ற வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தூத்துக்குடி மாநகர மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக களத்திலும், நீதிமன்றங்களிலும், ஆட்சி, அதிகார முகமைகளிடமும் தாமிர உருக்காலை ஸ்டெர்லைட்டை அகற்றக் கோரி நீண்ட நெடிய போராட்டம் நடத்தி வந்தனர் என்பதை நாடறியும். நச்சாலைக்கு எதிரான மக்களின் அறப் போராட்டத்தின் போது மக்களின் மீதான உச்சக்கட்ட தாக்குதலாக 2018 மே 22 அன்று நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு 15 உயிர்களைக் கொடூரமாக காவு கொண்டது. 2018 மே 28-ல் அரசாணை […]