தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 3 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்; அமைச்சர் கீதாஜீவன்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது,. தலைமைச் செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, மேயா் ஜெகன் பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினா் ராதாகிருஷ்ணன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் பேசியதாவது:-
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் ஏற்கனவே வெல்வோம் 200 வரலாறு படைப்போம் என்று கூறியதிற்கிணங்க எல்லோரும் பணியாற்றி வரும் நிலையில் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட 3 தொகுதிகளிலும் அரசின் திட்டங்கள் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவது ஓரு வகையில் ஓருவா் பயனடைந்திருப்பாா்.

இதுபோன்ற அனைத்து திட்டங்களையும் மக்களிடம் எடுத்துக் கூறி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி கோவில்பட்டி விளாத்திக்குளம் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் அதற்கு அனைவரும் களப்பணியாற்றுங்கள்”
இவ்வாறு அவர் பேசினாா்.
மார்ச் 1 திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுதல்,
பிப்ரவரி 21ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள தென் மண்டல பாக முகவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுதல்,
பிப்ரவரி 22ம் தேதி தூத்துக்குடியிலும் 24ம் தேதி கோவில்பட்டியிலும் நடைபெற உள்ள தமிழ்நாடு தலைகுனியாது தேர்தல் பரப்புரை கூட்டங்களை சிறப்பாக நடத்துதல்,
பிப்ரவரி 23ம் தேதி வெளியிடப்பட உள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் தகுதியுள்ள எந்த ஒரு வாக்காளரும் விடுபடாத வகையில் தொடர்ந்து கண்காணிக்கும் பணியை மேற்கொள்ளுதல்
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.







