கோவில்பட்டி கல்லூரியில் கணிதத்துறை தேசிய கருத்தரங்கு
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி கணிதத்துறை சார்பாக ஒரு நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. கல்லுாரிச் செயலர் ப.மகேந்திரன் வழிகாட்டுதலின்படி கல்லுாரியின் முதல்வர் (பொ) மூ.சுப்புலெட்சுமி கருத்தரங்கினை தொடக்கி வைத்தார். மேலும் கணிதத்துறையின் இணைப்பேராசிரியர் எ.சுசிலா அனைவரையும் வரவேற்றார்.

இக்கருத்தரங்கிற்கு மருதை, பேராசிரியர் (ஓய்வு), பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி, செல்வக்குமார், பேராசிரியர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், திருநெல்வேலி, உமாதேவி, இணைப்பேராசிரியர், HKBK பொறியியல் கல்லுாரி, பெங்களூர் மற்றும் முனைவர் கில்பர்ட் ராணி, உதவிப்பேராசிரியர் மற்றும் உள் தர மதிப்பீட்டுக் கழக (IQAC) ஒருங்கிணைப்பாளர், அருளானந்தர் கல்லுாரி, கருமாத்துார், மதுரை ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
மேலும் பல்வேறு கல்லூரிகளிலிருந்து 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.







