தவெக விருப்ப மனுக்கள் வினியோகம் 50 ஆயிரம் ; திரும்பி வந்தது 5 ஆயிரம்!
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், முதல் முறையாக களம் இறங்கும் தவெகவில் கடந்த 6-ந் தேதி முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது. 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் முதல் நாளே 10 ஆயிரம் விருப்ப மனுக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் வாங்கப்பட்டன. கூட்டம் அதிகமாக இருந்ததால், பனையூர் பகுதியே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால்,விருப்ப மனுக்கள் வாங்க நேரில் வரவேண்டாம். ஆன்லைன் வழியாக வாங்கி கொள்ளலாம் என்று தவெக தலைமை அறிவித்தது.
இந்த நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை உரிய கட்டணத்துடன் சமர்ப்பிக்க, வரும் 20-ந் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை, பனையூர் அலுவலகம் வந்து நேரில் 10 ஆயிரம் பேரும், ஆன்லைன் வழியாக 40 ஆயிரம் பேரும் என மொத்தம் 50 ஆயிரம் பேர் விருப்ப மனுக்களை பெற்றுள்ளனர்.

இதற்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100 ஆகும். ஆனால், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, திரும்ப ஒப்படைக்கும்போது பொதுப் பிரிவினர் ரூ.10 ஆயிரம், எஸ்.சி.-எஸ்.டி. பிரிவினர் ரூ.5 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆனால், தவெக அலுவலகத்திற்க பூர்த்தி செய்யப்பட்டு திரும்பி வந்த மனுக்களின் எண்ணிக்கை 5 ஆயிரம் மட்டும் தான் என்று கூறப்படுகிறது. இவ்வளவு குறைவாக பத்தில் ஒரு மடங்கு மட்டுமீ மனுக்கள் பூர்த்தி செய்யப்பட்டு வரப்பட்டுள்ளதால் கட்சித் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது,







