ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி காலை 9.10 மணிக்கு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையான லோக் பவனில் இருந்து காரில் புறப்பட்டார் காலை 9.25 மணிக்கு தலைமைச்செயலகம் வந்த அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. […]
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, 2026 சட்டப் பேரவை தேர்தலுக்கான தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஜனவரி 19 ஆம் தேதி தொடங்கி தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்குபயணம் மேற்கொண்டுள்ளது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் டி.கே.எஸ்.இளங்கோவன், கோவி.செழியன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா, எம்.எம். அப்துல்லா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எழிலன் நாகநாதன், கார்த்திகேய சிவசேனாபதி, ஆ.தமிழரசி ரவிக்குமார், ஜி.சந்தானம் ஐ.ஏ.எஸ், சுரேஷ் சம்பந்தம் ஆகிய 12 பேர் இடம் பெற்றுள்ள […]
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி கயத்தார் ஒன்றியம் சூரியமினிகன் கிராமத்தில் உள்ள குளத்தில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு அந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விவசாயம் களை இழந்து மக்களின் வாழ்வாதாராம் பாதிக்கப்படும் என்று கிராம மக்கள் இந்த எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. உயர் அழுத்த மின் கோபுரங்கள அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்ததால் கிராமத்தினர் ஒன்று கூடி […]
கோவில்பட்டி வேலாயுதபுரம் நகராட்சி திமுக கவுன்சிலர் லவராஜா ஏற்பாட்டில், வேலாயுதபுரம் பகுதியில் உள்ள ஏழை எளியோர் பலருக்கு வேட்டி, சேலை மற்றும் காய்கறி தொகுப்புகள் வழங்கப்பட்டன. அதேபோல், நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கும் வேஷ்டி, சேலைகள் மற்றும் காய்கறி தொகுப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் கிரிஜா தலைமை தாங்கி , நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை தொடக்கி வைத்தார். தொழிலதிபர் அமலி பிரகாஷ் முன்னிலை வகித்தார். நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு பின், […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 25-ந்தேதி நடக்கிறது; நாளை முதல் பூஜைகள்
கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 25ம் தேதி காலை 5 மணிக்கு மேல் 5.50 மணிக்குள் நடைபெறுகிறது. (கும்பாபிஷேக விழாவில் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் பி.கீதா ஜீவன் அவர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்,. பி.கே.சேகர்பாபு சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழுமத் தலைவர் க.மணிவாசன். அரசு கூடுதல் தலைமை செயலாளர் பி.என்.ஸ்ரீதர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கு.க.இளம்பகவத் , சட்டமன்ற உறுப்பினர்கள் கடம்பூர் ராஜு. சண்,முகையா. மார்கண்டேயன் உள்பட […]
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. இன்னும் சில மாதங்களே தேர்தலுக்கு உள்ளதால், அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, வரும் 23ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். இந்தப் பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளின் தலைவர்களை மேடையேற்ற பாஜக […]
விளாத்திகுளத்தில் வரும் 25ந்தேதி நடைபெற உள்ள உள்ளம் தேடி இல்ல நாடி கேப்டன் ரத யாத்திரை நிகழ்ச்சியில் பொதுசெயலாளர் பிரேமலதா கலந்து கொள்கிறார்,. தேசிய முற்போக்கு திராவிடகழகம் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட அலுவலகத்தில் வடக்கு மாவட்டசெயலாளர் சுரேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநில கேப்டன் மன்ற செயலாளர் வைரம் மாவட்ட அவைதலைவர் கொம்பையா பாண்டியன் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கழக பொதுசெயலாளர் பிரேமலதா வரும் 25 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை தூத்துக்குடி […]
திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் ஒட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன்(வயது 32). இவர் செவ்வாய்பேட்டையில் தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். பொங்கல் விடுமுறையையொட்டி பார்த்திபன் தனது நண்பர்களான சுகுமார், கேசவன் ஆகியோருடன் ஆந்திராவுக்கு சுற்றுலா சென்றார். அவர்கள் 3 பேரும் சுற்றுலா முடிந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினர். இரவு 10.30 மணியளவில் மணவாளநகர் ஒட்டிக்குப்பம் பழைய பேருந்து நிலையம் அருகே அவர்கள் வந்தபோது, சாலையின் நடுவில் 4 இளைஞர்கள்போதையில் ரகளை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருதரப்புக்கும் […]
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்., அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- மகளிர் நலன் : (குல விளக்குத் திட்டம்) சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட, குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2,000/- வழங்கப்படும். இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். *ஆண்களுக்கும், மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம்: நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் […]
கோவில்பட்டி ரோட்டரி கிளப் சார்பாக திருவள்ளுவர் மன்றத்தில் திருவள்ளுவரின் 2057 வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. திருவள்ளுவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ரோட்டரி மாவட்ட புரவலர் விநாயகா ஜி. ரமேஷ் தலைமையில் ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார்,முன்னாள் மாவட்ட உதவி ஆளுநர்கள் முத்துசெல்வம், ஆசியாபார்ம்ஸ் பாபு ஆகியோர்முன்னிலை வகித்தார்கள். வள்ளுவரின் அவதார தினத்தை வரும் ஆண்டில் பெரிய விழாவாக கொண்டாட உறுதிமொழி எடுக்கப்பட்டது. ரோட்டரி செயலாளர் பழனிகுமார் நன்றி கூறினார். பொங்கல் விழா […]







